tamilnadu

img

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களை கைது செய்து ஒடுக்குவதா?

சென்னை, மே 7 - பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போரா டும் மாணவர்கள் மீது அடக்குமுறை யை கட்டவிழ்த்து விட்டுள்ள அமெரிக்கா வைக் கண்டித்து, சென்னையிலுள்ள அந்நாட்டின் தூதரகத்தை இந்திய மாண வர் சங்கத்தினர் (SFI) முற்றுகையிட்டனர்.

பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறி கல்வி நிலையங்கள், மருத்துவமனை களைக் குறி வைத்து குண்டு வீசி அழித்து  வருகிறது. இந்தத் தாக்குதலில் பல்லா யிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும், படுகாயமுற்றும் உள்ளனர்.

இஸ்ரேலின் இந்த யுத்தவெறியை அமெரிக்க ஏகாதி பத்தியம் தலைமையிலான நாடுகள் தூண்டிவிட்டும் வருகின்றன. இந்நிலையில், பாலஸ்தீன மக்கள் மீதான, இஸ்ரேல் - அமெரிக்காவின் கூட்டு  யுத்தத்தைக் கண்டித்து, உலகம் முழு வதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, அமெரிக்கா முழுவதும் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரி களில் படிக்கும் மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். ஆயிரக்கணக்கில் கூடும் அவர்கள் மீது அடக்குமுறையை கட்ட விழ்த்து விட்டுள்ள அமெரிக்க அரசு, மாண வர்களைக் கைது செய்து சிறையிலும் அடைத்து வருகிறது.

படிப்பை தொடர முடியாத வகையில், தடைகளையும் விதித்து வருகிறது. இதற்கு எதிராகவும் உலகம் முழுவதும் மாணவர்கள் கண்ட னக் குரல் எழுப்பி போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று (மே 7) சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்த இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI), முன்னதாக தூதரகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சங்கத்தின் மாநிலச் செயலா ளர் ஜி. அரவிந்த்சாமி தலைமையில் அமெரிக்காவிற்கு எதிராக முழக்கங் களையும் எழுப்பினர்.

மத்தியக் குழு உறுப்பினர் எஸ். மிருதுளா, மாவட்ட நிர்வாகிகள் ஆனந்த்குமார், ரா. பாரதி (தென் சென்னை), வே. அருண்குமார், தமிழ் (மத்திய சென்னை), காவியா, நித்திஷ் (வடசென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே, அவர்களை காவல்துறையினர், குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று வலுக்கட்டாய மாக கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜி. அரவிந்த்சாமி, “பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து அமெரிக்கா முழுவதும் மாண வர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற னர்.

அவர்களைக் கடுமையாக தாக்கி  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் களை அந்நாட்டு அரசு கைது செய்துள் ளது. மாணவர்களின் படிப்பையும் தடை செய்து வருகிறது. கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவி ஒருவரின் ஆராய்ச்சி படிப் பையும் தடை செய்துள்ளது. எனவே, அமெரிக்க அரசை கண்டித்தும், பாலஸ் தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்த கோரியும் இந்த போராட்டம் நடை பெற்றது” என்றார். மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தியது.

;