tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இன்று ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டில்  1.5 லட்சம் பேர் எழுதுகின்றனர்!
சென்னை, மே 4- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற் கான ‘நீட்’ தேர்வு ஞாயிற் றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடக்கிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றை லட்சம் மாணவர்  கள் தேர்வை எழுதுகின்ற னர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, கட லூர், கரூர், தருமபுரி, ஈரோடு, சேலம், தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், கன்னி யாகுமரி, வேலூர், தஞ்சா வூர், விழுப்புரம், நீலகிரி, திரு வாரூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம், புதுக் கோட்டை உட்பட 31 நகரங்க ளில் நீட் தேர்வு நடக்கிறது. 

‘சவுக்கு’ சங்கர் அதிரடி கைது
தேனி, மே 4- யூடியூப் சேனல் உட்பட சமூகவலைதளங்களில், பாஜக, அதிமுக, நாம் தமிழர்  போன்ற கட்சிகளுக்கு ஆத  ரவாகவும், திமுக, சிபிஎம்  உள்ளிட்ட இந்தியா கூட்ட ணிக்கு எதிராகவும் கருத்துக் களைத் தெரிவித்து வருப வர் சவுக்கு சங்கர். இவர்,  தற்போது பெண் காவலர்கள் குறித்தும், காவல் துறை அதி காரிகள் குறித்தும் அவ தூறாக சமூகவலைதளங்க ளில் பேசியதாக எழுந்த குற்  றச்சாட்டின் பேரில், அவர்  மீது சட்டப்பிரிவு 147 (கல  வரம் செய்தல்), 294 பி (அவ தூறு பரப்புதல்), 506 (1)  (கொலை மிரட்டல்), 353  (அரசு ஊழியரை பணி  செய்ய விடாமல் தடுத்தல்)  உள்ளிட்ட பிரிவுகளில் சவுக்கு சங்கர் மீது கோவை  சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.  இந்நிலையில் தேனியில் இருந்த சவுக்கு சங்கரை  கோவை சைபர் கிரைம்   போலீசார் சனிக்கிழமையன்று கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் இன்று கடைகள் இயங்காது?
சென்னை, மே 4- தமிழ்நாடு வணிகர் சங்  கங்களின் பேரமைப்பு சார் பில் 41-ஆவது வணிகர் விடு தலை முழக்க மாநில மாநாடு மதுரையில் மே 5-இல் நடை பெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதில் இருந்தும் லட்சக் கணக்கான வணிகர்கள் மதுரை மாநாட்டில் ஒன்று கூட உள்ளதால் ஞாயிற்றுக் கிழமையன்று தமிழகம் முழு வதும் உள்ள கடைகள், வணிக  வளாகங்கள், வணிக நிறு வனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள் ளது.

;