tamilnadu

img

ஊராட்சிமன்றத் தலைவரின் ஊழலை கண்டித்து சிபிஎம் போராட்டம்

சேலம், ஜூன் 11 - ஊராட்சிமன்றத் தலைவரின் ஊழல் நடவடிக் கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பில் ஆத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், பைத்தூர் ஊராட்சிமன்றத்  தலைவராக கலைச்செல்வி என் பவர் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் ஆள்துளை மோட்டார் அமைத்ததில் தெருவிளக்கு வாங்கியது மற்றும் சரிசெய்த செலவு என ரூ 3.50 லட்சம் ஊழல் செய்துள்ளார். இதுதொடர் பாக இவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டத்தினை நடத்த முயன்றனர். இதனைய டுத்து ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீ சார் குவிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் பாரதி, சந்திர குமார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆகியோர் போராட்டக் காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த் தையில் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆகையால் போராட்டம் தற் காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பி. ராமமூர்த்தி, தாலுகா செய லாளர் எ. முருகேசன், தாலுகாக் குழு உறுப்பினர்கள் துரைசாமி மற்றும் தங்கம்மாள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;