tamilnadu

img

ஏழ்மை நிலையிலும் சாதித்த மாணவிக்கு குவியும் பாராட்டு

மயிலாடுதுறை, மே 8 - ஏழ்மையான நிலையிலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண் பெற்று சாதித்த அரசுப் பள்ளி மாணவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாணவர், வாலிபர் சங்கத்தினர் நேரில் சென்று பாராட்டினர்.  மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ் வரன் கோயில் மருவத்தூர் புதுத்தெரு வில் வசித்து வருபவர்கள் பாஸ்கரன்-ஜெயபாரதி தம்பதி. இவர்களது இரண் டாவது மகள் வர்ஷா. வைத்தீஸ்வரன் கோயில் அரசு பெண்கள் மேல்நிலைப்  பள்ளியில் பயின்ற இவர், 12 ஆம் வகுப்பு  தேர்வில் 600-க்கு 500 மதிப்பெண்கள் எடுத்து, முதல் மாணவியாக தேர்ச்சி  பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளார்.  ஏழ்மையான நிலையிலும் சாதித்த மாணவியை இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நாகையா உள்ளிட்டோர், சீர்காழி ஒன்றியச் செய லாளர் அசோகன் தலைமையில் நேரில்  சந்தித்து மாணவிக்கு சால்வை அணி வித்து வாழ்த்து தெரிவித்தனர். செம்பனார்கோவில் அரசு மகளிர் பள்ளி 95.3 சதவீதம் தேர்ச்சி  செம்பனார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.3 சதவீதம் தேர்ச்சி  பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 148 பேரில் 141  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மு.சங்கமிழா,  எஸ்.சுஜி ஆகியோர் 547 மதிப்பெண்கள்  பெற்று முதலிடமும், என்.பிரியங்கா  544 மதிப்பெண் பெற்று இரண்டாமிட மும், ஏ.அஸ்வினி 534 மதிப்பெண் பெற்று  மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். தமிழ், கணிதம், இயற்பியல், வேதி யியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு, கணினி அறிவி யல், கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவு களில் நூறுக்கு நூறு மதிப்பெண்களை மாணவிகள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி  தலைமையாசிரியர் வீ.ரமா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர் கள் வாழ்த்தினர். ஆக்கூர் ஓரியண்டல் பள்ளி  95 சதவீதம் தேர்ச்சி  ஆக்கூர் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்  தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள் ளது. பள்ளி அளவில் ரிஸ்மியா 547 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஹமீதா ரபீலா 502 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், முகமது ராசித் 497  மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித் துள்ளனர். வணிகவியல் பாடத்தில் ரிஸ்மியா 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி யின் தாளாளர் இக்ரம் ரசூல், தலைமை யாசிரியர் ஷாஜகான், பள்ளி நிர்வாகத்தி னர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

;