tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பன்முகத் தன்மை கொண்ட இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்க குரல் எழுப்புவது என்னுடைய உரிமை மட்டுமல்ல; எனது கடமையும் கூட! பா.ஜ.க. அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம்!

                           ****************

தில்லி கலவரங்களில் 53 பேர் உயிர் இழந்தனர். இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை புலன் விசாரணை செய்வதற்கு பதிலாக; யாருடைய நச்சு கலந்த வெறுப்பு உரைகள் வன்முறையைத் தூண்டின என்பதை கண்டுபிடிப்பதற்கு பதிலாக; உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தில்லி காவல்துறை அமைதியாக நடந்த சி.ஏ.ஏ./என்.பி.ஆர் /என்ஆர்சி எதிர்ப்பு போராட்டங்களுக்கும் மதக்கலவரங்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு பொய்யான கருத்தாக்கத்தை கட்டமைக்க முயல்கின்றனர்.

                           ****************

உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் தில்லி காவல்துறை ஒரு பாரபட்சமான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. தில்லி மதக்கலவரத்துக்கான காரணங்களை கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற நீதிபதியின் கீழ் ஒரு சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும். யுஏபிஏ  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

                           ****************

பிரபல காவல்துறை அதிகாரி ஜூலியோ ரிபைரோ பிரச்சனையின் மையமான அம்சத்தை முன்வைக்கிறார். ‘கோலி மாரோ’  முஸ்லிம்களை சுட்டுத் தள்ளுங்கள்,என்று நஞ்சு கலந்த வெறுப்பு உரைகளை பேசியவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? ஏனெனில் அவர்கள் பாஜகவில் உள்ளனர். அமைதியான போராட்டக்காரர்களையும் அரசியல் எதிர்ப்பாளர்களையும் குற்றவாளிகளாக கட்டமைக்கும் மிக மோசமான கருத்தாக்கத்தை உருவாக்க காவல்துறையை மத்திய அரசாங்கம் நிர்பந்தித்து கொண்டிருக்கிறது.

சமூக வலைதளைங்களில் வாசிக்க...  

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/ 

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;