tamilnadu

அறிவியல் நன்மைக்கே! - கோவி.பால.முருகு

சிட்டுக்   குருவி  என்வீட்டில்
     சிவ்சிவ் என்றே பறந்திடுவாய்!
வட்டம் போட்டே சுற்றிவந்து
     வாயால் உணவைக் கொத்திடுவாய்!

வண்ணம் பலவாய் நீயிருப்பாய்
       வடிவில் சிறிதாய் தானிருப்பாய்!
எண்ணம்  போல சுற்றிவந்தே
         எங்கும் பறந்து திரிந்திடுவாய்!

பனையின்  மேலே மரங்களிலே
     பாங்காய்க் கூட்டைக் கட்டிடுவாய் ! 
நனையா மழையின் வீட்டினிலே
     நலமாய்க் குடும்பம் பெருக்கிடுவாய்! 

வீட்டின் வாசல் புறத்தினிலே
       விளைந்த நெற்கதிர் கட்டிடுவோம்!
கூட்டின் வெளியே வந்ததனை
       கொத்தி  கொத்தி  உண்டிடுவாய்!

உன்னைப் பார்க்க முடியவில்லை
     ஓடி எங்கே ஓளிந்தாயோ!
இன்னல் தந்த மின்னலைகள்
       இருந்த உன்னை அழித்ததுவோ?

அறிவியல் வளர்ச்சி நன்மைக்கே  
      அழித்தால் அதனை ஏற்கேனே!
குறியாய் உயிரினம் காக்காமல்
         குவியும் அறிவியல் வீண்தானே!

;