tamilnadu

img

தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை வாக்குச்சாவடி

தஞ்சாவூர், ஏப்.20 -  தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி உள்பட 3 இடங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 2,308 வாக்குச் சாவடி களில் தலா 8 மாதிரி வாக்குச் சாவடி களும், மகளிர் மட்டுமே நிர்வகிக்கும் வாக்குச் சாவடிகளும் இடம்பெற்றன. மேலும் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, மதுக்கூர் அருகே கண்டியங்காடு, கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூர் ஆகிய இடங்களில் பசுமை வாக்குச் சாவடி அமைக்கப் பட்டது.  கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச் சாவடிகளைத் தேர்ந்தெடுத்து, இந்த முறை பசுமை வாக்குச் சாவடிகளாக மாற்றப்பட்டன. இதில், மாதிரி வாக்குச் சாவடி போன்று நுழைவு வாயிலில் பந்தல் அமைக்கப்பட்டு, வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டன. மேலும், பன்னீர், சந்தனம், குங்கு மத்துடன் வரவேற்பாளரும் நிய மிக்கப்பட்டனர். இந்த மையத்துக்கு வந்த வாக்காளர்களிடம் எந்த பாகத்து க்கு எப்படிச் செல்ல வேண்டும் என வழியும் கூறி உதவி செய்தனர். மேலும், வாக்குச் சாவடி முகப்பில் நெகிழி அட்டையில் எழுதுவதற்கு பதி லாக தென்னங்கீற்றில் பசுமை வாக்குச் சாவடி என அறிவிப்பு செய்யப் பட்டிருந்தது. வாக்குப் பதிவு மறை விடத்தைச் சுற்றி அட்டையுடன் தென்னங்கீற்று வைத்து மறைக்கப் பட்டிருந்தது. பிளாஸ்டிக் கேனுக்கு பதிலாக மண்பானையில் குடிநீர் வசதி செய்யப்பட்டது. மையத்துக்குள் நெகிழிக்கு பதிலாக தென்னை ஓலை பின்னலில் அலங்காரங்கள் செய்யப்பட்டன.  வாக்குச் சாவடி மைய அலுவ லர்கள் பயன்படுத்திய எழுதுகோல் கூட காகித அட்டையில் தயாரிக்கப் பட்டிருந்தது. வாயிலில் மக்கும் குப்பை, மக்காத குப்பைக்கான தொட்டிக ளும் தென்னங்கீற்றில் செய்யப்பட்டு வைக்கப்பட்டன. கல்லூரி வாயிலிலி ருந்து வாக்குச் சாவடிக்கு முதிய வர்கள், உடல் நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை அழைத்துச் செல்ல ஆட்டோவுக்கு பதிலாக பேட்டரி வாகனம் பயன்படுத் தப்பட்டது.  கிட்டத்தட்ட பெரும்பாலான பொருள்கள் நெகிழியைத் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்க ளால் வைக்கப்பட்டிருந்தது வாக்கா ளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

;