tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஏப்ரல் 6 ஆஜ்மீர், ஏப்ரல் 7 நவாடா, ஏப்ரல் 9 பிலிபித் மற்றும் ஏப்ரல் 29 பன்ஸ்வாரா ஆகிய இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய  தொடர் தேர்தல் பிரச்சார உரைகளில் இஸ்லாமிய மக்கள் மீது மதவெறுப்பை கக்கி, விஷத்தை விதைத்தார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும் தேர்தல் நடைமுறை விதிகளின் படியும் அப்பட்ட மான மீறல்கள் ஆகும். இந்த பேச்சுக்கள் தொடர்பாக மோடி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் நான் தொடர் முறையீடு செய்துள்ளேன். ஆனால் தேர்தல் ஆணையம் இதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை; நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடத்துவதற்கான அரசியல மைப்புச் சட்டப்பூர்வமான ஒரே அதிகார அமைப்பு தேர்தல் ஆணையம் தான். ஆனால் அது ஜனநாயகத்தின் மரண சாசனத்தை எழுதுகிறதோ என்ற அளவிற்கு மோசமாக இருக்கிறது.

;