tamilnadu

img

தமிழைப் புறக்கணித்து ரயில்வே நடத்திய தேர்வு ரத்து

தமிழைப் புறக்கணித்து ரயில்வே நடத்திய தேர்வு ரத்து  

சு. வெங்கடேசன் எம்.பி.யின் தலையீட்டுக்கு வெற்றி

மதுரை, ஆக. 29 - தமிழ் மொழியைப் புறக் கணித்து, தெற்கு ரயில்வே நடத்திய இளநிலைப் பொறி யாளர் பதவி உயர்வுக்கான தேர்வு சு. வெங்கடேசன் எம்.பி.  தலையீட்டின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழியிலான கேள்வித்தாளுடன் விரைவில் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. ரயில்வே தேர்வுகளை பொறுத்த வரை ஆங்கிலம், இந்தி மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப் பட்டு வருகின்றன. ஆனால் ஆகஸ்ட் 10 அன்று இளநிலை பொறியாளர் பதவி  உயர்வுக்கான தேர்வில் கேள்வித்தாள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே தரப்பட்டிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமது சமூகவலை தள பக்கத்தில், சு. வெங்கடேசன் எம்.பி. கூறியிருப்பதாவது:  தெற்கு ரயில்வேயால் நடத்தப்படும் இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுக்கான தேர்வில் மாநிலமொழி உள்ளிட்ட மூன்று மொழிகளில் கேள்வித் தாள் தரப்பட வேண்டும் என்பது விதி முறை. ஆனால், மாநில மொழியான தமிழில் கேள்வித்தாள் வழங்காமலேயே கடந்த ஆகஸ்ட் 10 அன்று தேர்வு நடத்தப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் சு. வெங்கடேசன் இந்த அத்துமீற லைச் சுட்டிக்காட்டி, “இந்தித் திணிப்பும், தமிழ் ஒழிப்புமே ரயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கின்றன” என்று கண்ட னம் தெரிவித்திருந்தார். “இந்தி விசுவாசத்தை அவ்வ ப்போது வெளிப்படுத்துவதில் ரயில்வே துறைக்கு ஏன் இந்த ஆனந்தம்?” எனவும், “ஒன்றிய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது” எனவும் கடுமை யாக சாடினார். அத்துடன், தமிழைப் புறக்கணித்து நடத்தப்பட்ட ரயில்வே தேர்வை ரத்து செய்து தமிழ் மொழியில் கேள்வித்தாள் கொடுத்து மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ண விற்கு கடிதம் ஒன்றையும் சு. வெங்க டேசன் எம்.பி. எழுதினார்.  அவரின் இந்த தலையீட்டைத் தொடர்ந்து, தமிழ்மொழியில் நடத்தப் படாத ரயில்வே இளநிலைப் பொறியா ளர் பதவி உயர்வு தேர்வு ரத்து செய்யப் பட்டுள்ளது. தமிழ்க் கேள்வித்தாளுடன் விரைவில் மறு தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள சு. வெங்க டேசன் எம்.பி. “தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி அகற்றப்பட்டது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தனது கடிதத்தின் மீது உடனடி நட வடிக்கை எடுத்த ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. நன்றியும் தெரிவித்துள்ளார்.