tamilnadu

img

முர்ஷிதாபாத்தில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் பாஜகவின் முயற்சியை முறியடித்த சிபிஎம்

கொல்கத்தா, மே 8-   நாடாளுமன்ற மக்க ளவைத் தேர்தல் 7 கட்டங் களாக நடைபெறுகிறது.  இதில் மூன்றாம் கட்ட மாக மேற்கு வங்கத்தில் செவ்வாய்க்கிழமையன்று தேர்தல் நடைபெற்றது.  இதில் திரிணாமுல் காங் கிரஸ் மற்றும் பாஜகவினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு பல இடங்களில் வாக்குச்சாவடிகளை ஆக்கிரமித்தனர். மால்டா வடக்கு, மால்டா தெற்கு, முர்ஷிதாபாத், ஜாங்கிபூர் ஆகிய நான்கு மக்களவை மற்றும் பக்வாங்கோலா சட்டமன்ற தொகுதி  இடைத் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே திரிணாமுல் கட்சி யினர் கிராமங்களில் வாக் காளர்களை மிரட்டினர். பல இடங்களில் இடது முன் னணி மற்றும் காங்கிரஸ் தொண்டர்களை தடுக்க முயன்றதால் மோதல் ஏற் பட்டது. இதில் பலர் காய மடைந்தனர்.  சிபிஎம் மாநிலச் செய லாளரும் இடது முன்னணி வேட்பாளருமான முகமது சலீம் முர்ஷிதாபாத்தில் நியா யமான வாக்குப்பதிவை உறுதிப்படுத்த நேரடியாக வழிவகுத்தார். தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற கட்சி ஊழியர்கள், வாக்காளர்களிடம் நம்பிக் கையை ஏற்படுத்தினர். சில இடங்களில் வாக்குச் சாவடிகளை ஆக்கிரமிக்க முயன்ற திரிணாமுல் கட்சி யினரை முகமது சலீம் நேரடி யாக தடுத்து நிறுத்தினார். தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு தேவையான எதிர்ப்பை வெளிப்படுத்திய அனைவரையும் சலீம் பாராட்டினார். மால்டா தெற்கில் உள்ள சாம்சேர்க்கில் திரிணாமுல் கட்சியினர் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் வாக்குச் சாவடி முகவர்களை தடுக்க முயன்றபோது மோதல் வெடித்தது. இந்த மோதல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் 400 புகார் கள் அளிக்கப்பட்டுள்ளன.

;