tamilnadu

img

நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது! அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் சாடல்

நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு  தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது!

அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் சாடல்

சென்னை, அக். 17 - நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்ப தாக சட்டப் பேரவையில் நிதியமைச்சர் தங்கம்  தென்னரசு கடும் குற்றச்சாட்டு வைத்தார்.  2025-26ஆம் ஆண்டு முதல் துணை மதிப்பீடுகள் குறித்த விவா தத்தில் பேசிய அவர், 14 ஆண்டு களுக்குப் பிறகு கலைஞர் ஆட்சிக்குப் பின் தற்போது தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், முதலமைச்சரின் கடின உழைப்பே காரணம் என்றும் பெருமையுடன் தெரிவித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ. 45,000 கோடியில் வெறும் ரூ. 450 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. குடி நீர் திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ. 3,407 கோடி, நூறு நாள் வேலை திட்டத்தில் ரூ. 1,975 கோடி நிதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது. கல்வி நிதியைக் கூட போராடித்தான் பெற முடிகிறது என்றார். 8 புதிய தேசிய அதிவேக சாலைகளில் உத்தரப்பிர தேசத்துக்கு மட்டும் 3  வழங்கப்பட்டுள்ளன; தமிழ்நாட்டுக்கு ஒன்று கூட இல்லை. ரூ. 7.5 லட்சம் கோடி வரி வருவாய் தந்த தமிழ் நாட்டுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி மட்டுமே கிடைக்கிறது. உத்த ரப்பிரதேசம் ரூ. 10 லட்சம் கோடி பெற்றுள்ளது என்று ஒப்பிட்டார். 6 சதவிகிதம் மக்கட்தொகை கொண்ட தமிழ்நாட்டுக்கு நிதிப் பகிர்வு  7 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகித மாகக் குறைக்கப்பட்டுள்ளது. மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்படவில்லை. 90 சதவிகிதம் தமிழக அரசின் நிதியில் கட்டப்பட்ட வீடுகளில் பிரதமரின் பெயர் பொறிக்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம்? என்றும் கேள்வி எழுப்பினார். அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு வேண்டும் என்று வலியுறுத்தினார்.