tamilnadu

img

மாற்றுத்திறனாளி பெண்கள்-குழந்தைகளுக்கு ரூ.5 கோடி வைப்பு நிதி: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, மார்ச் 23- பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகள் இழப்பீடு திட்டம் ரூ.5 கோடி வைப்பு நிதியுடன் உருவாக்கப்படும் என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறி வித்துள்ளார். சட்டப்பேரவை 110-வது விதியின் சில அறி விப்புகளை வெளியிட்ட முதலமைச்சர், 41 ஆயிரத்து 133 அங்கன்வாடி மையங்களில் சிறிய கட்டிட பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ள ஒரு மையத்திற்கு தலா ரூ. 3 ஆயிரம்  வீதம் 12 கோடியே 34 லட்சம் வழங்கப்படும். சென்னை, மைலாப்பூரில் 9 கோடியே 33  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமூக நல ஆணை யரகத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய  புதிய கட்டிடம் கட்டப்படும்.

மன வளர்ச்சி குறைபாடு, மூளை முடக்கு வாதம், தசைச் சிதைவு நோய், பல்வகைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய ஆயிரம் பயனாளிகளுக்கு முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தனியே ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்து சிகிச்சை அளிக்கப்படும். பாலியல் வன்கொடுமை மற்றும் இதர குற்றங்களால் பாதிக்கப் பட்டு, வாழ்ந்து வரும்  மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு விரைந்து இழப்பீடு வழங்கிட ஏது வாக, “மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இழப்பீடு திட்டம்-2020”க்கான நிதியம், 5 கோடி ரூபாய் வைப்பீட்டுடன் உருவாக்கப்படும் என்றார்.

;