world

img

தீக்கதிர் உலக செய்திகள்

படகு கவிழ்ந்து புலம்பெயர்  தொழிலாளர்கள் பலி 

மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்களின் படகு கவிழ்ந்ததில் 70 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். காம்பியா மற்றும் செனகலைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மக்கள் மிகச் சிறிய படகில் ஐரோப்பா நோக்கி ச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மிகக் குறைவானவர்களே உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 100 ஐ கடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 க்குப் பிறகு இவ்வாறு பயணிப்பவர்களில் 10,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கண்ணியமான முறையில் இந்தியாவுடன்  பேச்சுவார்த்தை நடத்த தயார் : பாக்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் நிலவி வரும் காஷ்மீர் உள்ளிட்ட தீர்க்கப்படாத அனைத்து பிரச்சனைகள் குறித்தும் மரியாதையான, கண்ணியமான முறையில் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார்   தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் நாங்கள் பேச்சுவார்த்தைக்காக கெஞ்ச மாட்டோம்  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா  உர இறக்குமதி அதிகரிப்பு  

2025 முதல் 6 மாதங்களில் ரஷ்யாவில் இருந்து இந்தியா செய்யும் உர இறக்குமதி 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்களாக உள்ளது. இந்தியாவின் மொத்த உர இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு சுமார் 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவின் உரத் தேவையில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவிடம் இருந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் விதித்த தடையால் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உர உற்பத்தியை அதிகரித்து தனது உற்பத்தியை இந்திய சந்தைக்கு திரும்பியுள்ளது ரஷ்யா.

இஸ்ரேல் பொருளாதார உறவை துருக்கி துண்டித்தது 

இஸ்ரேலுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை முழுமையாகத் துண்டித்துவிட்டதாக துருக்கி அறிவித்துள்ளது. மேலும் தங்கள் வான்பரப்பை இஸ்ரேல் பயன் படுத்துவதற்கு தடையும் விதித்துள்ளதாக அந்நா ட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கன் ஃபிடான் அறிவித்துள்ளார். அகண்ட இஸ்ரேலை அமைக்கப் போவதாக இஸ்ரேல் பிரதமர் சில வாரங்களுக்கு முன் அறிவித்தார். இது துருக்கியையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கை என்பதால் துருக்கி இஸ்ரேலுடனான உறவு களை துண்டித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புடின்  இந்தியா வருகிறார்  

ரஷ்ய ஜனாதிபதி புடின் 2025 டிசம்பர் மாதம் இந்தியா வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய ரஷ்ய ஜனாதிபதி மாளிகை வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் போது புடினும் மோடியும் சந்திப்பார்கள் எனவும் அப்போது டிசம்பர் மாதம் புடின் இந்தியா வருவதற்கான  பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

போராட்டக்காரர்கள் மீது கார் ஏற்றிப் படுகொலை : காவல்துறைக்கு எதிராக இந்தோனேசியாவில் வெடித்தது பெரும் போராட்டம்

ஜகார்த்தா,ஆக.30- இந்தோனேசியாவில் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிராக போராடியவர்கள் மீது காரை ஏற்றி படுகொலை செய்த காவல் துறைக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்துள்ளது.  இந்தோனேசியாவில் அதிக வேலை யின்மை, பணவீக்கம், குறைந்த ஊதியம், உள்நாட்டில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை, அரசு நிர்வாகத்தில் அதிக ரித்து வரும் ஊழல் என மக்கள் பெரும் நெருக்க டியை சந்தித்து வருகிறார்கள்.  இந்நிலையில் அந்நாட்டு ஆட்சியாளர்க ளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுவதற்கும் ஊழலுக்கும் எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.  தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை ஊதியத்தை விட சுமார் 20 மடங்கு அதிகமாக 5 முதல் 5.5 லட்சம் வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர்க ளின் வீட்டு வாடகைப்படிக்காக 2 லட்சத் திற்கும் அதிகமாக செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பயணப்படி உள்ளிட்ட பல்வேறு விதமான சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் ஆகியோர் ஆகஸ்ட் 22 அன்று அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.    இந்த போராட்டத்தின் போது காவலர்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். மிக மோசமான முறையில் போராட்டக்காரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.  காவல்துறையினர் போராட்டக்காரர் ஒருவர் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்த னர். இந்த படுகொலை மக்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து இந்தோனேசியா முழுவதும் போ ராட்டங்கள் வெடித்து பெரும் வன்முறையாக மாறியுள்ளது. பல அரசு அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.