உலகப் போர் முடிவடைந்ததன் 80-ஆம் ஆண்டு செப். 3-இல் சீனாவில் ராணுவ அணிவகுப்பு!
பெய்ஜிங், ஆக. 28 - இரண்டாம் உலகப் போர் முடிவடை ந்ததன் 80-ஆவது ஆண்டு விழா மற்றும் ஜப்பான் ஆக்கிரமிப்புக்கு எதி ரான வெற்றியைக் குறிக்கும் வகை யில், சீனாவில் ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதனை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 3 அன்று நடைபெறும் இந்த நிகழ்வில் ஈரான் ஜனாதிபதி பெசஷ்கியான், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோ உள்ளிட்ட சீனாவின் நட்பு நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர். தியானென்மென் சதுக்கத்தில் நடைபெற உள்ள இந்த ராணுவ அணிவகுப்பில் சீனாவின் சமீபத்திய தயாரிப்பு ஆயுதங்கள், ராணுவத் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும் என அந்நாட்டு ராணுவம் கடந்த வாரமே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சீனா நடத்தும் ராணுவ அணிவகுப்பில், அமெரிக்காவின் எதிரணியில் உள்ள ஈரான், ரஷ்யா, வட கொரியா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள் பங்கேற்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின்போது, அமெரிக்காவின் வர்த்தக போருக்கு எதிராக இந்நாடுகள் மேலும் வலுவாக இணைந்து செயல்படுவது பற்றி விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவின் தியான்ஜின் நகருக்குச் செல்கிறார். அவரும் இந்த ராணுவ அணிவகுப்பில் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.