world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் 48 மணி நேர போர் நிறுத்தம்

 பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லையில் கடந்த 2 வாரங்களாக கடும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட ராணுவத்தாக்குதல்கள் நடந்து வந்தன. இந்த மோதலில் பாகிஸ்தானுக்கு பின்னால் அமெரிக்காவின்  கை இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தா னின் கோரிக்கையை ஏற்று 48 மணி நேரம் போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த பாஸ்போர்ட்  பின்தங்கிய இந்தியா  

சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. கடந்த 2014 முதல் முதலிடத்தில் இருந்து வந்த அமெரிக்கா 12 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்தத் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்திலும், இந்தியா 85-ஆவது இடத்திலும் உள்ளன. அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகள் மாணவர் விசா கட்டுப்பாடுகள் காரணமாக அது தரவரிசையில் பின்னோக்கிச் சென்றுள்ளது என கூறப்படுகிறது.  

கரியமில வாயு அளவு புதிய உச்சம் - ஐ.நா

வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவு 2024 இல் இருந்ததை விட புதிய உச்சத்தை எட்டியுள்ளது என ஐ.நா. வானிலை அமைப்பான உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. 1957 இல் காற்றில் உள்ள கரியமில வாயுவின் அளவை கணக்கிட துவங்கிய பிறகு 2024 தான் அதிகபட்ச அளவு பதிவானது. எனவே, உலக நாடுகள் கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பது காலநிலை மட்டுமன்றி, பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்கும் மிகவும் அவசியம் என ஐ.நா அவை வலியுறுத்தியுள்ளது.

நிதி நெருக்கடியால் மனிதாபிமானப் பணிகள் சரிவு

 பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய வேண்டிய தேவை ஐ.நா. அவைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால் அந்த உதவிகள் அனைத்தையும் செய்ய வேண்டிய அளவுக்கு போதிய நிதி உதவி  ஐ.நா. அவைக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கொடுப்பதில்லை.  இதனால் மனிதாபிமான உதவிகள் சரிவின் நிலையில் இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.