world

img

தீக்கதிர் உலக செய்திகள்

துணை ராணுவம் தாக்குதல்:  சூடானில் 24 போ் பலி

சூடானில் துணை ராணுவத்தின் தாக்குத லில் 24 பேர் பலியாகியுள்ளனர். 55 பேர் படுகாயமடைந்துள்ளனர். அந் ந்நாட்டின் துணை ராணுவம் அல்-பஷீரை என்ற நகரை முற்றுகையிட்டு நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் இம்மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2023 ஏப்ரல் 15 முதல் சூடானில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மீது  பாகிஸ்தான் குண்டு வீச்சு 

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்  வழித்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வான்வழி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ள தாகவும் ஏழுக்கும் மேற்பட்டோர் படுகாயம டைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆப்கன் அரசு கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் நிலை களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் பதற்றத்தை அதி கரித்துள்ளது.

உக்ரைனுக்கு ஏவுகணை வெடிமருந்து விற்பனை செய்ய அமெ.ஒப்புதல்

bஉக்ரைன ராணுவத்திற்கு ஏவு கணைக்கான வெடிமருந்துகள், எரிபொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது. இதன் மூலம் சுமார் 825 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை அமெரிக்கா விற்பனை செய்ய உள்ளது. இந்த ஆயுதங்களை டென்மார்க், நெதர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் அமெரிக்காவிடம் காசு கொடுத்து வாங்கி உக்ரைனுக்கு கொடுக்க உள்ளன.   

சீன வெற்றி தின அணிவகுப்பில்  பங்கேற்க வேண்டாம் : ஜப்பான்

இரண்டாம் உலகப்போர் மற்றும் ஜப்பானின் ஆக்கிரமிப்புக்கு எதிரான சீனாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என ஜப்பான் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அந்நிகழ்வில் பங்கேற்பது ஜப்பான் எதிர்ப்பு மனநிலை எனவும் குற்றம் சாட்டியுள்ளது. செப்டம்பர் 3 அன்று நடைபெறும் இந்த ராணுவ  அணிவகுப்பில் 26 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.  

போராட்டக்காரர்களை கைது செய்ய  உத்தரவிட்ட நேதன்யாகு 

பணயக் கைதிகளை மீட்க வேண்டும் என போராடிய இஸ்ரேல் குடிமக்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய உத்தர விட்டுள்ளார் நேதன்யாகு. நேதன்யாகுவும் அவரது அமைச்சரவையும் ஹமாஸ் வசம் உள்ள பணயக் கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியால் அம் மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்ற னர். இந்நிலையில் சமீபத்தில் அந்நாட்டு ராணுவ தளபதி வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட் டம் நடத்திய நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். 

பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் படுகொலை : இஸ்ரேலை கண்டித்து குரேசிய ஊடக ஊழியர்கள் போராட்டம்

ஜாக்ரெப், ஆக.29-  பாலஸ்தீன பத்திரிகையாளர்களை இஸ்ரேல் படுகொலை செய்வதை கண்டித்து குரேசிய பத்தி ரிகையாளர் சங்கம் (SNH) பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு தொழிற் சங்கங்கள், பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.  “தொழிற்சங்கங்கள் தான் தொழிலாளர்க ளின் சக்தியாக விளங்குகிறது என்பதை  ஏற்றுக் கொண்டு, நம் கண்முன்பாக நடக்கும் பயங்கரக் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது” என்று குரேசிய பத்திரிகையாளர் சங்கம் போராட்ட அறைகூவலில் தெரி வித்துள்ளது.   குண்டுகளாலும்  பட்டினியாலும் கொலை  இந்தப் போராட்டத்தின் போது பேசிய தொழிற் சங்க தலைவர்கள், காசாவில் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவது, ஒட்டுமொத்த பத்தி ரிகை சுதந்திரத்திற்கும் அபாயத்தை ஏற்படுத்தும். காசாவில் என்ன நடக்கிறது, இஸ்ரேல் என்ன கொடுமைகளை செய்கிறது என்ற உண்மை அந்த பகுதியை தாண்டி வெளியே வரக்கூடாது என்பதற்காக இது நடத்தப்படுகிறது.  அதே போல வெளிநாட்டு பத்திரிகையாளர்க ளை காசாவிற்குள் நுழைந்து விடாமல் தடுப்பதன் மூலமாக இஸ்ரேல்  ராணுவம் கருத்துச் சுதந்தி ரத்தையும், மக்களின் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உரிமையையும் தடுக்கிறது. உண்மைக்கான குரல்களாக உள்ள பத்திரிகையாளர்கள் குண்டுகளாலும் பட்டினி யாலும் படுகொலை செய்யப்படுவதை நாம் நேரில் காண்கிறோம் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். மேலும் இந்தப் போராட்டங்கள் பாலஸ்தீன மக்கள் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு ஆதரவானது மட்டுமல்லாமல், தொழிற்சங்க இயக்கத்திற்கு ஒரு சமூகப் பொறுப்பு உள்ளது என்பதையும் நினைவுபடுத்துகிறது.  அதாவது தவறுகளுக்கு எதிரான போ ராட்டத்தில் தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு சக்தியாக தொழிற்சங்கங்கள் இருக்க வேண்டும் என்றும் பேசினர்.  சமீப மாதங்களில், குரேசியாவில் உள்ள பத்திரிகையாளர்களின் தொழிற்சங்கங்கள் காசா வில் உள்ள பத்திரிகையாளர்கள் இஸ்ரேல்  ராணுவத்தால் குறிவைத்து தாக்கப்படுவதற்கு எதி ராக பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. அவற்றில் ஒன்று, உள்ளூர் கலைஞர்களுடன் இணைந்து 2023 அக்டோபர் 7, முதல் இஸ்ரேல் ராணுவத்தால்   கொல்லப்பட்ட 200 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் உருவப்படங்களை சேமிக்க   கூட்டு முயற்சி செய்து வருகின்றனர். போ ராட்டங்களின் போது அவர்களின் உருவப் படங்களை ஏந்தி பேரணி செல்கின்றனர்.