world

img

அமெரிக்கா சொல்லில் ஒன்று செயலில் ஒன்றாக உள்ளது : ஜி ஜின்பிங் சாடல்

பெய்ஜிங்.ஏப்.29- சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் “அமெரிக்கா செல்வது ஒன்று செய்வது ஒன்று என இரட்டை வேடத்துடன் உள்ளது” என கடுமையான முறையில் விமர்சித்துள்ளார்.  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலா ளர் ஆண்டனி பிளிங்கன் கடந்த வாரம் சீனாவிற்கு சென்று ஜனாதிபதி ஜி ஜின் பிங்கைச் சந்தித்து இருத்தரப்பு ஒத்து ழைப்பு,சர்வதேச அரசியல் சூழல்  குறித்து உரையாடியுள்ளார்.  அப்போது சீனாவை அமெரிக்கா எதிரியா கக் கருத வேண்டிய அவசியம் இல்லை என  பிளிங்கனிடம் ஜின்பிங் தெரிவித்தார். அத்தோடு அமெரிக்கா சொல்வது ஒன்றாக வும், செய்வது ஒன்றாகவும்  உள்ளது;  இந்த இரட்டைப்போக்கை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் கூறினார். முன்னதாக சீனாவின்   வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இயக்குனராக உள்ள  வாங் யீ உடனான சந்திப்பின் போது பேசிய பிளிங்கன், சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான போட்டியை பொறுப்புடன் கையாள அமெரிக்கா முயல்கிறது எனத் தெரி வித்துள்ளார். தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸுடனான கூட்டணியை மேம்படுத்தி சீனாவிற்கு நெருக்கடி கொடுக்க முயல்வது;  மறுபுறம்  தைவானுக்கு ராணுவ உதவிகளை செய்து சீனாவிற்கு எதிரான நெருக்கடியை அதிக ரித்து வருவது மற்றும் குறைக்கடத்தி உற் பத்தியில் சீனாவை முடக்க பொருளாதார கட்டுப்பாடுகள் விதித்தது ஆகியவற்றால்  சீனா - அமெரிக்கா  இடையே வர்த்தக- அரசி யல் மோதல் நீடிக்கிறது. இவ்வாறான அரசியல் சூழலுக்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பிற்கு பிறகு சீன ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “நமது இரு நாடுகளும் நாம் பேசிய வார்த்தைகளுக்கு உண்மை யாக இருக்க வேண்டும்; நாம் ஒவ்வொருவர்  நாடும் செழித்து வளர  உதவ வேண்டுமே தவிர ஒருவருக்கொருவர் தீங்கு விளைவித்துக் கொள்ளக் கூடாது” என ஜின்பிங் தெரிவித் த்துள்ளார்.   மேலும் சில துறைகளில் ஆக்கப்பூர்வ முன்னேற்றங்கள் அடைந்திருந்தாலும் இன்னும் நாம் வளர வேண்டிய துறைகள் உள்ளன, நாம் முன்னேறி செல்ல வேண்டிய துறைகள் இன்னும் நிறைய உள்ளன என்றும் கூறியுள்ளார்.

;