world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு  துணைப் பிரதமர் நியமனம் 

பாகிஸ்தானின் துணைப் பிரதம ராக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் பதவியேற்றுள் ளார்.பிரதமர் ஷேபாஸ் ஷெரிப் உத்தரவின் பேரில் அமைச்சரவையில் முடிவெடுக்கப் பட்டு இந்த அறிவிப்பு வந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.ஷெரீப் மற்றும் வெளி யுறவுத்துறை அமைச்சர்  உலக பொருளாதார மன்றத்தின் விவாதத்தில் கலந்து கொள்வ தற்காக சவூதி அரேபியாவிற்கு சென்றிருந்த போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

துபாயில் கட்டப்படும்  மிகப்பெரிய விமான நிலையம்

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்போவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. பிர தமரும் மன்னருமான  ஷேக் முகமது பின்  ரஷீத் அல் மக்தூம் ரூ.2.9 லட்சம் கோடி மதிப்பில் புதிய விமான நிலையத் திட்டத்தை அறிவித்த போது இதனை தெரிவித்துள்ளார். அந்த விமான நிலையம் 2.6 கோடி  பயணி களை கையாளும் திறனுடன்,  400  நுழைவாயில் கள் மற்றும்  ஐந்து இணை  ஓடு பாதைகளுடன் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

வீடுகள் மீது குண்டு வீசிய  இஸ்ரேல் ராணுவம்

காசாவின் ரஃபா பகுதியில் இருந்த வீடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியதில் 13 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுடன் போர் நிறுத்த உடன்படிக்கைக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்க ஹமாஸ் தலைவர்களு டனான பேச்சுவார்த்தையை எகிப்து நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதலை  நடத்தியுள்ளது இஸ்ரேல்.

சர்வதேச ஒத்துழைப்பின் அவசியம்  முன்பை விட அதிகரித்துள்ளது

உலகப் பொருளாதார மாமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 28 அன்று சவூதி  அரேபிய தலைநகர் ரியாத்தில்  இரண்டு நாட்கள்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலகளாவிய ஒத்து ழைப்பு, வளர்ச்சி  ஆகியவை குறித்த விவாதம்  நடைபெற்றது.  குறிப்பாக  சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி  வலுவான உலகளாவிய பொருளா தாரத்தை எவ்வாறு உருவாக்குவது என விவா திக்கப்பட்டுள்ளது.சர்வதேச ஒத்துழைப்புக்கான தேவையும் அவசியமும் முன்பை  விட மிக அவசிய மானதாக  இப்பொழுது மாறியுள்ளது என கூட்டத் தலைவர் போர்கே ப்ரெண்டே தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு பயணம் செய்யும்  எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கின் சீனப் பயணம் பேசு பொருளாகியுள்ளது. கடந்த வாரம் இந்தியா வருவதாக இருந்த அவர் தனது பயணத்தை திடீரென ரத்து செய்தார். மேலும் அதுகுறித்து தனது எக்ஸ் கணக்கில் டெஸ்லா நிறுவனம் தொடர்பான முக்கிய சந்திப்பு இருப்பதால் பயணத்தை தவிர்க்க வேண்டிய சூழல் உருவானது என தெரிவித்திருந் தார். மின்சார வாகன உற்பத்தியில் முதன்மை நாடாக உள்ள சீனாவில் தனது மின்னணு வகைப் பொருட் கள் உற்பத்தியை விரிவாக்கும் பேச்சுவார்த்தை யாக இருக்கலாம் என கூறப்படுகிறது.  

;