world

img

தீக்கதிர் உலக செய்திகள்

குறையும்  இலங்கை பணவீக்கம் 

கடந்த பிப்ரவரி மாதம் 5.1 சதவீத மாக இருந்த இலங்கையின் பண வீக்கம் மார்ச் மாதம்  2.5 சதவீதமாக குறைந்து ள்ளதாக அந்நாட்டின் கணக்கெடுப்பு  மற்றும் புள்ளியல்துறை  தெரிவித்துள்ளது. இலங்கையின்  பணவீக்கம் 2022 ஆம் ஆண்டின் செப்டம்பர் முதல் படிப்படியாக குறைந்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரி விக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களாக உணவுப் பொருட்களின் பணவீக்கம் மாற்றமின்றி 5 சதவீதமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஈரானுடன் வணிக உறவா?   மிரட்டும் அமெரிக்கா 

ஈரானுடனான வணிக ஒப்பந்தத்தை உருவாக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.  ஏப்ரல் 22 முதல் மூன்று நாள் பயணமாக ஈரான் ஜனாதிபதி பாகிஸ்தான் சென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க  வெளியுற வுத்துறை அமைச்சக துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல், ஈரானுடன் பொருளாதார உறவுகளை உருவாக்கும் எந்த நாடாக இருந்தாலும்  பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வீர்கள் என மிரட்டியுள்ளார்.

‘காசா மருத்துவமனைகளில்  வெளிப்படையான ஆய்வு வேண்டும்’

காசாவில் கான் யூனிஸ் நகரின் நாசர் மருத்துவமனை மற்றும் ஷிபா மருத்துவமனைகளில் இருந்து படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீனர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்த இரு மருத்துவமனைகளும் இஸ்ரேல் ராணு வத்தால் தாக்குதலுக்கு உள்ளானவை.இந்நிலையில் அவர்கள் இஸ்ரேல் ராணு வத்தால் படுகொலை செய்யப்பட்டார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்காக தெளிவான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணை நடத்த  வேண்டும் என ஐ.நா சபை   அழைப்பு விடுத்துள்ளது.

அர்ஜெண்டினா  மாணவர்கள் போராட்டம்

அர்ஜெண்டினா பல்கலைக்கழ கங்களுக்கான நிதியை அந்நாட்டு ஜனாதிபதி வெட்டியதை தொடர்ந்து பல்லா யிரக்கணக்கான மாணவர்களும் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிதி வெட்டின் காரணமாக பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகம் மூன்று மாதங்களுக்குள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தீவிர வலதுசாரியான ஜேவியர் மிலேய் அரசு  சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பொதுத் துறைகளுக்கான நிதிகளை வெட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

‘செவ்வாய் கிரகமாக’ மாறிய  ஏதென்ஸ் நகரம் 

சஹாரா பாலைவனத்தில் வீசிய பலத்த காற்றினால் எழுந்த தூசி மேகங்களால் கிரீஸ் நாட்டின் தலைநகரம் செவ்வாய் கிரகம் போல் மாறியது. ஏற்கனவே மார்ச் மாத இறுதியில் இதே போன்ற மணல் காற்று உருவானது என்றும் 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு கிரேக்க நாடு சந்திக்கும் மோசமான மணல் காற்றில் இதுவும் ஒன்று என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இந்த மணல் மேகங்களால் முழுவதும் ஆரஞ்சு நிறமாக  மாறியுள்ள ஏதென்ஸ் நகரில் புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 

;