world

img

ரஃபா மீதான இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் சகிக்க முடியாதது

ரஃபா, மே 7- ரஃபா  மீதான தரைவழி தாக்குதலை மே 6 அன்று இஸ்ரேல் ராணுவம் துவங்கியுள்ளது. இந்த தரைவழி தாக்குதல் சகிக்க முடியாதது என  ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். காசா - எகிப்து எல்லையான ரஃபாவில் ஹமாஸ் குழுவினர் இருப்பதாகவும் அங்கு தரை வழி தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவ தாகவும் இஸ்ரேல் ராணுவம் கடந்த சில மாதங்க ளாக கூறி வந்தது. இந்நிலையில் மே 6 அன்று ரஃபா பகுதியில் தாக்குதலை துவங்கியதோடு அங்கு தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீனர்களில் 1 லட்சம் பேரை அங்கிருந்து வெளியேற வேண்டும் என மிரட்டி வருகிறது.  2023 அக்டோபர் 7 அன்று போர் துவங்கிய போது  வடக்கு காசா பகுதியில் இருந்த பாலஸ் தீனர்களை தெற்கு நோக்கி குறிப்பாக ரஃபா எல்லைக்கு  விரட்டியது இஸ்ரேல் ராணுவம். அங்கு தாக்குதலை நடத்த மாட்டோம் என்று கூறிய இஸ்ரேல் ரஃபாவிலும் ஏவுகணைகளை வீசி தொடர்ந்து இனப்படுகொலைகளை செய்து வந்தது. இந்நிலையில் ரஃபா  பகுதியில்  டாங்கிகள் மூலம் எல்லையை மூடி ஐ.நா கொடுத்து வருகிற அத்தியாவசியப் பொருட்களான உணவு, மருந்துகளை அத்துமீறி தடுத்துள்ளது. இத னால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் எந்த உதவியும் பாதுகாப்பும் கிடைக்காத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மீண்டும் முயற்சிக்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இந்த காலம் போர் நிறுத்தத்தை கொண்டுவர முக்கியமான காலம் எனவும், ரஃபாவில் இஸ்ரேல் முன்னெ டுக்கும் தரைவழித் தாக்குதல் பேரழிவுகளை உருவாக்கி மனிதாபிமான நெருக்கடிகளை ஏற்படுத்துவதோடு மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் நிலைமைகளை சீர்குலைக்கும். இதனால் உருவாகும் விளைவுகள் சகிக்க முடி யாததாக இருக்கும் என்று குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.  ஏற்கனவே காசாவின் ரஃபா பகுதியில் உள்ள சுமார் 6 லட்சம் குழந்தைகள் உணவு, மருந்துகள் இன்றி கடும் பேரழிவை எதிர் கொண்டு வருகின்றனர் என ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஃபா பகுதியில் இருந்து பாலஸ் தீனர்களை வலுக்கட்டாயமாக மீண்டும் வெளி யேற்றும் செயல் அக்குழந்தைகளை கடுமை யாகப் பாதிக்கும் என  எச்சரித்துள்ளது. பாலஸ்தீனர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில்  எந்த இடமும் இல்லாத சூழலில் ரஃபாவிலும் நடத்தப்பட்டு வரும் தாக்கு தலுக்கு ஹமாஸ் அமைப்பு உட்பட உலகள வில் பலரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

;