world

img

தீக்கதிர் உலக செய்திகள்

போர் நிறுத்தத்தை நிராகரித்த நேதன்யாகு 

போர் நிறுத்த முன் மொழிவுகளை இஸ்ரேல் ஜனாதிபதி நேதன்யாகு நிராகரித்துள்ளார். இஸ்ரேலின்  இனப்படுகொலை தாக்கு தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கெரெம் ஷாலோம் எல்லையில் ஹமாஸ் நடத்திய  தாக்குதலில் 3 இஸ்ரேல் வீரர்கள் மரணமடைந்தனர். இதனை தொடர்ந்து ஹமாஸ் முன்மொழியும் போர் நிறுத்தத் தையும், காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் வீரர்களை பின்வாங்கக் கோருவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என நேதன்யாகு கூறியுள்ளார். 

2,400 மாணவர்களை  கைது செய்த அமெரிக்கா 

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கூடாரம் அமைத்து போராடிய 2 ஆயிரத்து 400 மாணவர்களை அமெ ரிக்க அரசு கைது செய்துள்ளது.மாணவர் கள் மீது வன்முறை பயன்படுத்தியது, வளா கங்கள் மற்றும் முகாம்களில் சோதனை நடத்தியது, வலுக்கட்டாயமான சோதனை நடவடிக்கை ஆகியவற்றை கண்டித்து அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் உட்பட பலர்   அரசின் மீதும் காவல் துறை மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்து   வருகின்றனர். 

பனாமா தேர்தலில்  ஜோஸ் ரவுல் முலினோ வெற்றி 

பனாமா நாட்டின் பொதுத் தேர்தலில் ஜோஸ் ரவுல் முலினோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரிக்கார்டோ மார்டினெல்லிக்கும் ரவுல் முலினோவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் ரவுல் முலி னோ பெரும் வெற்றி பெற்றுள்ளார்.  இந்த வெற்றியை அந்நாட்டு தேர்தல் ஆணை யத்தின் தலைவர் ஆல்ஃபிரடோ ஜுன்கா, முலினோவுக்கு வீடியோ அழைப்பு மூலம்  உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

;