world

img

இஸ்ரேலின் பொய் குற்றச்சாட்டுகள் அம்பலம் : பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் அறிக்கை

நியூயார்க்,ஏப்.23- இஸ்ரேல் மீது  ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குத லுக்கு ஐ.நா ஊழியர்கள் உதவி செய்ததாக சர்வதேச நீதி மன்றத்தில் இஸ்ரேல் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைத்தது. அந்த குற்றச்சாட்டை பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் கேத்தரின் கொலோனா அறிக்கை அம்பல மாக்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா தலைமையிலான  குழு சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில் ஐ.நா. நிவா ரண மற்றும் வேலை முகமையின் (UNRWA) ஊழியர் கள் “பயங்கரவாத அமைப்புகளின்” உறுப்பினர்கள் என்று கூறுவதற்கு இஸ்ரேல் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது இனப்படு கொலை வழக்கை தென் ஆப்பிரிக்கா தாக்கல் செய்து அதன் மீதான விசாரணை  2023 டிசம்பர் மாதம் நடை பெற்றது. அந்த வழக்கு விசாரணையின் போது 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. நிவாரண மற்றும் வேலை முகமை யின் ஊழியர்கள் உதவி செய்ததாக எந்த ஆதாரமும் இன்றி இஸ்ரேல் தரப்பு குற்றம் சுமத்தியது.  அதனை தொடர்ந்து அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஐ.நா நிவாரண அமைப் பிற்கு வழங்கி வந்த நிவாரணத் தொகையை நிறுத்தி விட்டன. இது திட்டமிட்ட முடக்கம். பாலஸ்தீனர்கள் மீது பட்டினியை போர் ஆயுதமாக இஸ்ரேலும் அமெரிக்கா வும் பயன்படுத்துகிறது என சர்வதேச அளவில் குற்றச் சாட்டுகள் எழுந்தன.   இந்நிலையில் வெளியான  பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் கேத்தரின் கொலோனா  அறிக்கை மூலம்   ஐ.நா ஊழியர்கள் மீது இஸ்ரேல் வைத்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை எனவும் அது திட்டமிட்ட அவதூறு என்ற உண்மையும்  உலகிற்கு தெரிய வந்துள்ளது.  இதன் பிறகு சில நாடுகள் ஐ.நா நிவாரண அமைப்பிற்கான நிறுத்தி வைத்த நிதியை  மீண்டும் வழங்கத் துவங்கியுள்ளன.  கொலோனா  அறிக்கையில் இஸ்ரேல் முன்வைத்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வழங்க தவறி விட்டது என்றும் காசா, லெபனான், ஜோர்டான், சிரியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பாலஸ்தீன அகதிக ளின்  குறைந்தபட்ச உணவு தேவைக்கும் கூட ஐநா நிவாரண அமைப்பை மட்டுமே சார்ந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

;