world

img

நெல்சன் மண்டேலா பேரனின் கணக்கை முடக்கிய ‘எக்ஸ்’

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் ஆத்திரம்

ஜோகன்னஸ்பர்க், ஏப்.28- உலகப் பெரும் கார்ப்ப ரேட் முதலாளி எலான் மஸ்க்  கிற்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனம் தென் னாப்பிரிக்க முன்னாள் ஜனா திபதியும் விடுதலைப் போரா ளியுமான  நெல்சன் மண்  டேலாவின் பேரனுடைய கணக்கைத் தடை செய்துள் ளது. தென்னாப்பிரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பின ராக உள்ள  ஸ்வேலிலே மண்ட்லா மண்டேலா, நெல்  சன் மண்டேலாவின் பேரன் ஆவார். இவர், இஸ்ரேலால் இனப்படுகொலைக்கு உள்  ளாகி வரும் பாலஸ்தீனர் களுக்கு 5 ஆயிரம் டன்  உண வுப்பொருட்களை பல்வேறு அமைப்புகள் உதவியுடன் துருக்கியில் இருந்து காசா விற்கு கப்பல் மூலம்  கொண்டு செல்ல இருப்பதாக  கடந்த வாரம்  பேசிய காணொலி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து, அவரது கணக்கை முடக்கியுள்ளது எக்ஸ் நிறு வனம்.

அந்த காணொலியில் தென்னாப்பிரிக்க மக்க ளின் விடுதலைக்காக நெல்  சன் மண்டேலா ஏன் போராடி னார் எனவும், தான் ஏன்  பாலஸ்தீனத்திற்கு ஆதர வாக இருக்கிறேன் என்றும்  பேசிய மண்ட்லா மண்டேலா,  பாலஸ் தீன மக்கள் அனு பவித்து வரும் கொடுமை கள், மனித துயரங்களை  நம்முடைய  காலத்தில்  நாம் சந்தித்து வருகிற மிகப்  பெரிய தார்மீகப் பிரச்சனை  எனவும் குறிப்பிட்டார். மேலும்  பாலஸ்தீன மக்களின் சுதந்தி ரம் இல்லாமல் நமது சுதந்தி ரம் முழுமையடையாது என்று குறிப்பிட்ட  அவர், பாலஸ்  தீன மக்களுக்கு தனது முழு  ஆதரவையும் அந்த காணொ லியில் தெரிவித்திருந்தார்.  அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “துருக்கியில் இருந்து காசாவிற்கு ‘சுதந்  திர கப்பல்கள்’ மூலம் 5 ஆயி ரம் டன் உணவுப்பொருட் களை பல்வேறு மனித உரி மைகள், மனித நேய அமை ப்புகளுடன் இணைந்து  கொண்டு செல்ல உள் ளோம். '

மேலும் இந்த பய ணம் பாலஸ்தீன மக்கள் மீது  நிகழ்த்தப்பட்டு வரும் அட்டூ ழியங்கள், இனப்படு கொலைகள் மற்றும் போர்க்  குற்றங்கள் குறித்து சர்வ தேச மக்களின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என தெரி வித்துள்ளார். இதனிடையே, “இந்த பயணத்தை வெற்றிகரமாக முடிக்க கடல் வழியாக காசா விற்கு செல்ல 2007 ஆம்  ஆண்டு முதல் இஸ்ரேல் விதித்துள்ள தடையை முறி யடிக்க வேண்டிய அவசி யம் உள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஆறு  சுதந்திர கப்பல்கள் காசாவை நோக்  கிச் சென்ற போது  இஸ்ரேல்  ராணுவம்  தடுத்து நிறுத்தி கப்  பல்களுக்குள் சென்று  ஒன் பது சமூக ஆர்வலர்களை  சுட்டுப்படுகொலை செய் தது.  இந்த முறை அது போன்ற  இஸ்ரேலின்  தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக நாங்கள் உலகத்தின் கவ னத்தை பெற முயற்சி செய்கி றோம்.எங்கள் கப்பல்கள் காசாவை நோக்கிச் செல்  வதை நாங்கள் உறுதிப் படுத்தி உலகத்தின் பார்வை யை எங்கள் கப்பல்கள் மீது திருப்பும் போது இஸ்ரேல் எங்கள் மீது தாக்குதலை தொடுக்கும் வாய்ப்புகள்  குறையும்” என சர்வதேச ஒற்  றுமை இயக்கத்தின் இணை  நிறுவனரும்   பாலஸ்தீன- அமெரிக்க வழக்கறிஞரு மான   ஹுவைடா அராஃப் தெரிவித்துள்ளார்.  ஸ்வேலிலே மண்ட்லா மண்டேலாவின் எக்ஸ் கணக்கை முடக்கியதைத் தொடர்ந்து இஸ்ரேலின்  இனப்படுகொலைக்கு ஆத ரவாகவும் பாலஸ்தீன மக்க ளின் விடுதலைக்கு எதிராக வும் உள்ள எலான் மஸ்க் மீது சமூக ஊடகங்களில் கடு மையான விமர்சனங்கள் எழுந்  துள்ளன.
 

;