world

உலகப் பத்திரிகை சுதந்திர தினம்

பாரீஸ், மே 3 - கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக காசா மீதான இஸ்ரேலின் ‘இனஒழிப்புப் போர்’ தொடர்கிறது. இந்தத் தருணத்தில் காசாவில் நடைபெற்ற போர் குறித்த செய்தி வெளியிட்ட அனைத்து பாலஸ்தீன பத்திரிகையாளர்களுக்கும் யுனெஸ்கோ தனது உலகப் பத்திரிகை சுதந்திர விருதை (மே 2) வியாழனன்று வழங்கியது.

“இருள் மற்றும் நம்பிக்கையற்ற இந்த  நேரத்தில், இதுபோன்ற வியத்தகு சூழ்நிலை களில் நெருக்கடியைச் சந்தித்த பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களுக்கு அங்கீகாரத்தை யும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். மனிதநேயத்துடன் கூடிய அவர்களின் துணிச்சல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அர்ப்பணிப்புமிக்க பணி க்கு நாங்கள் பெரும் கடன்பட்டுள்ளோம்” என்று சர்வதேச ஊடக நிபுணர்களின் நடுவர் மன்றத் தலைவர் மொரிசியோ வெய்பெல் கூறினார்.

துணிச்சலுக்கு மரியாதை
கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத்திற் கான ஐ.நா. அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே, “கடினமான- ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்களின் துணிச்சலுக்கு இந்தப் பரிசு மரியாதை செலுத்துகிறது” என்றார்.

நியூயார்க்கை தளமாகக் கொண்ட, பத்திரிகையாளர்களைப் பாதுகாப்ப தற்கான குழு (CPJ) “அக்டோபர் மாதம்  போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 97 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள் ளனர்; அவர்களில் 92 பேர் பாலஸ்தீனர்கள்” எனத் தெரிவிக்கிறது.

;