world

img

பிரான்சு: கொரோனா தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது

பிரான்சு நாட்டில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

கோவிட் 19 என்கிற கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டபோதிலும் வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. குறிப்பாக, இந்த வைரஸ் குறுகிய காலத்திற்குள் தன்னை உருமாற்றி கொண்டு தனது பரவல் மற்றும் வீரியத்தை அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த வைரசின் தற்போதைய உருமாற்றியான ஒமைக்ரான் உலகம் முழுவதையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் மிக வளர்ந்த நாடுகளில் ஒன்றான பிரான்சு நாடு கொரோனா வைரஸ் தொற்றால் நிலைகுலைந்து போயுள்ளது. இந்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டு வருகிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  

இதனால் அந்நாட்டிலுள்ள மருத்துவமனைகள் அனைத்தும் வைரஸ் தொற்றாளர்களாக நிரம்பி வருகிறது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவை போதியளவு இருப்பு இல்லாததால் நோயாளிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்நாட்டு அரசு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. 

;