court

img

இலவச ஆக்ஸிஜன் தயாரிக்கப் போகிறதாம்... உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்  இடைக்கால மனு தாக்கல்...

புதுதில்லி:
ஆக்ஸிஜன் சிலிண்டர் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகின்றது. நோய் பரவலைத் தடுக்க மத்திய-மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் ஆக்சிஜன் சிலிண்டர்  பற்றாக்குறையாக உள்ளதாக பல்வேறு மாநிலங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;