districts

img

ஏழை மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சிதான் பாஜக ஆட்சி

கரூர், மார்ச் 28- ஒன்றிய பாஜக அரசு அடித் தட்டு மக்களை வாட்டி வதைக் கிறது என்றார் கனிமொழி எம்.பி.,

கரூர் மக்களவைத் தொகு தியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கி ரஸ் வேட்பாளர் செ.ஜோதி மணிக்கு ஆதரவாக, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், கரூர், வெங்கமேடு உள்ளிட்ட பகுதி களில் தீவிர வாக்குச் சேக ரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசிய தாவது: நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினால் மோடி அரசு சஸ்பெண்ட் செய்கிறது. வெளியில் கேள்வி எழுப்பி னால் ஜெயிலில் அடைக்கி றது. அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி தனது உடல் நிலை சரியில்லை என்பதை தெளிவாக எடுத்துரைத்தும், அவரை வெளியில் விட மறுக் கிறது ஒன்றிய பாஜக அரசு. 

அண்மைக் காலமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொய்யை மட்டுமே சொல்லி வருகிறார். கோவில்பட்டியில் வீரலட்சுமி, 1961 இல் பிறந்த போதும், அவரை சுதந்திரப் போராட்ட தியாகி என்கிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு சங்க கால இலக்கியத்தில் கூறப்பட்ட வல்வில் ஓரியை சுதந்திரப் போராட்ட வீரர் என்கிறார். மேலும் இதுவரை 20 ஆயிரம் புத்தகங்கள் படித்து விட்ட தாக கூறுகிறார். அவர் நாள் தோறும் இரண்டு புத்தகம் படித் தால்கூட, அவர் வயதை கணக்கிடுகையில் 20 ஆயி ரம் புத்தகத்தை படித்திருக்க முடியாது. ஆனால் பொய்யை மட்டுமே சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். 

பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் ரூபாய் தருவதாக கூறினார். ஆனால் இதுவரை யாருக்காவது வங்கி யில் பணம் செலுத்தியுள்ளா ரா? அவர் ஆட்சிக்கு வந்த போது கேஸ் சிலிண்டர் விலை  ரூ.400 ஆக இருந்தது. ஆனால் இன்று ரூ.1100-ஐயும் தாண்டி விட்டது. 

வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ள உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 111 ஆவது இடத்தில் உள்ளது. நம்மை விட சிறிய நாடுகளான பங்க ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள்கூட நமக்கு மேலே உள்ளன. இதுதான் மோடியின் சாதனை ஆட்சி. அம்பானி வீட்டு திருமணத்திற் காக 10  நாளுக்கு சர்வதேச விமான நிலையத்தை உரு வாக்கியவர்தான் மோடி. கார்ப் பரேட் நிறுவனங்களுக்காக ஆட்சி நடத்துபவர்தான் மோடி. 

ஏழை விவசாயிகள் வேளாண் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கேட்டால் கொ டுப்பதில்லை. ஆனால் கலை ஞர் தனது ஆட்சியில், ஏழை மக்கள் பசியாக இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்தார். முதல்வர் ஸ்டாலின், தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளுக் காக காலை உணவுத் திட் டத்தை செயல்படுத்தி வருகி றார். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நாடு முழுவதும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். 

ஏழை மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய் யுங்கள் என கோரிக்கை விடுத் தும், இதுவரை யாருக்கும் ரத்து செய்யப்படவில்லை. ஆனால் கார்ப்பரேட் கம் பெனிகளுக்காக 68,607 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளார். அடித்தட்டு மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சிதான் பாஜக ஆட்சி. நடக்கக்கூடிய தேர்தல் நாட் டை பாதுகாக்கும் தேர்தல். இந்த தேர்தலில் ‘40 உம் நமதே; நாடும் நமதே’ என்ற நிலை யை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

திமுக சார்பில் கரூர் மாநகர பகுதி செயலாளர் கணேசன், மாநகர செயலாளர் எஸ்.பி. கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;