districts

img

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க நடவடிக்கை கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி, அக். 29- கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி ஆட்சியர் தெரிவித்தார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடை பெற்றது. அவர் பேசுகையில், “தரணி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். அரசு நேரடி கொள்முதல் நிலை யங்களை அதிக எண்ணிக்கையில் தொடங்கவும், உலர் களம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் கூறினார். தென்பெண்ணை ஆற்றுடன் கெடிலம் ஆற்றை இணைத்து பாசன வசதி ஏற்படுத்துவது தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். சம்பா பருவத்திற்கு தேவையான அனைத்து ரசாயன உரங்களும் போது மான அளவில் இருப்பு வைத்திருக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் கூறினார். இதனைத்தொடர்ந்து, பயிர் காப்பீடு செய்வது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, வேளாண் இணை இயக்குநர் வேல்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) விஜயராகவன், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை  மேலாண்மை இயக்குநர் அரவிந்தன், செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் சிவ.சவுந்தரவள்ளி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

;