districts

img

மார்பக புற்றை நீக்கும் வகையில் புதுமையான சிகிச்சைமுறை அறிமுகம்

சென்னை, மார்ச் 28 -  மார்பக புற்றை நீக்கும் வகையில் ரோபோ  உதவியுடன் முலைக்காம்பை அகற்றாமல்  தக்கவைத்து உடனடியாக மறுகட்ட மைப்பை மேற்கொள்ளும் தெற்காசியாவின்  முதல் சிகிச்சையை அப்போலோ புற்று நோய் சிகிச்சை  மையம் வெற்றிகரமாக செய்திருக்கிறது. இதனால் நோயாளிக்கு அழகியல் ரீதியில் சிறப்பான விளைவுகள் கிடைப்பதை  இந்த ரோபோட்டிக் சிகிச்சை ஏதுவாக்கி யிருக்கிறது என்று மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர்களான டாக்டர் பி. வெங்கட் மற்றும் டாக்டர். பிரியா கபூர் ஆகியோர் தெரிவித்தனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் இந்த புதுமையான செயல் முறை, மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் என்றனர்.  அசாமைச் சேர்ந்த 37 வயதான பெண்ணுக்கு  இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. அவரது பாதிப்பு நிலையின் காரணமாக அவரது இரு கருவகங்களையும் அகற்றுவதுடன் சேர்த்து இருபக்க மார்பக நீக்க சிகிச்சையும் அவசியமாக இருந்தது. அப்பெண்ணின் வயதையும் மற்றும் அவரது மார்பகங்களின் இயற்கையான தோற்றத்தை தக்கவைப்பதின் முக்கியத்து வத்தையும் கருத்தில் கொண்டு, முலைக் காம்பை  நீக்காமல் மார்பகத்தை மட்டும் அகற்றும் சிகிச்சையானது செய்யப்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.

;