districts

img

சமூக நலக்கூடம் கட்டப்படும் 180வது வார்டு திமுக வேட்பாளர் விசாலாட்சி கபிலன் பேட்டி

சென்னை, பிப். 15 - 180ஆவது வார்டில் வசிக்கும் மக்கள் பயன் பெறும் வகையில் சமூக நலக் கூடம் கட்டப்படும்  என்று திமுகவேட்பாளர் விசா லாட்சி கபிலன் வாக்குறுதி அளித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து, பெண்க ளின் முன்னேற்றத்திற்கு பாடு பட்டு வருபவர் விசாலாட்சி கபிலன். வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலை யில், அந்த  அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், “சென்னை மாநகராட்சி 180ஆவது வார்டு முழுக்க உள்ள பிரச்சனைகள் அறிந் திருந்தாலும், தற்போது பிரச்சாரத்திற்கு செல்லும் போது, கடந்த கால அதிமுக ஆட்சியின் அவலங்களை பெரிதும் உணர முடிகிறது. அவ்வை நகரில் தண்ணீர் வசதி கிடையாது. கழிவுநீர் கால்வாய் துர்நாற்றம் வீசுகிறது. இந்தப்பகுதிக் கென்று தனி ரேசன் கடை கொண்டு வர முயற்சிப்பேன். திருவள்ளுவர் காலனியில் 4 தலைமுறைகளாக வசிக்கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா கிடையாது. அந்த மக்க ளுக்கு குடிமனைப் பட்டா பெற்றுத் தருவேன். சிறு தூறலுக்கு கூட திருவள்ளு வர் நகர், அவ்வைநகர், திரு வீதியம்மன் நகர் பகுதி களில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனை சரி செய்ய முறையான மழைநீர் கால் வாய் அமைக்க வேண்டி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கட்டமைப்பு காலாவதியாகி உள்ளது. தற்போதைய தேவைக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டி இருக்கி றது. ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரம் செயல்படும் வகையில் தரம் உயர்த்த வேண்டி உள்ளது. மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டி உள்ளது. குழந்தைகளுக்கு விளை யாட்டு உபகரணங்கள் தேவைப்படுகிறது.

திரு வள்ளுவர் நகரில் கூடுத லாக ரேசன் கடை திறக்க வேண்டி இருக்கிறது.இவற்றையெல்லாம் உணர்ந்துள்ளேன். இத்தகைய பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டி உள்ளது’’ என்றார். * அனைத்து தெருக்க ளிலும் கண்காணிப்பு கேமரா க்கள் (சிசிடிவி) பொருத்தப் படும். மின் விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்ற ப்படும். பிரதான பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தினமும் கிடைப்பதற்கு வழி வகை செய்யப்படும். * கட்டணமில்லா நவீன பொதுக்கழிப்பிடம், பழுத டைந்த தெருக்களில் கான்கி ரீட் சாலை அமைத்து தரப் படும். வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பு 100 ரூபாய் கட்டணத்தில் பெற்றுத் தரப்படும். * மாநகராட்சி சார்பில் சமூக நலக்கூடம் மற்றம் இளைஞர்களுக்கு உடற் பயிற்சி கூடம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆலோசனைக் கூடம் கட்டித் தரப்படும். * திருவள்ளுவர் நகர் மையப்பகுதியில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும். பூங்காக் கள் சீரமைத்து புதுப்பிக் க்கப்படும். மாநகராட்சி விளையாட்டுத் திடலில் பார் வையாளர் கூடம் அமைக்கப் படும். * திருவான்மியூர் பேருந்து நிலைய சந்திப்பு, மருந்தீஸ்வரர் திருகோவில் கிழக்கு வாசல், ஆர்டிஓ அலு வலகம், திருவள்ளுவர் நகர் ஆகிய 4 இடங்களில் உயர் கோபுர மின் விளக்கு கள் அமைத்து தரப்படும். குடிநீர் வசதி, மின் விளக்கு வசதியுடன் பேருந்து நிழற் குடை அமைத்து தரப்படும். * புதிய கடற்கரை சாலை பகுதியில் நடை பயிற்சி செய்யும் பகுதியை தூய்மை செய்து தெரு விளக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை எரிவதற்கு வழிவகை செய்ய ப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளர்.

;