districts

img

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம்

புதுக்கோட்டை, ஏப்.26- பட்டியலின மக்கள் பயன்படுத்  தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணத்தை கலந்த குற்றவாளிகளை உடனடி யாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  இதுதொடர்பாக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்தி ருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் கந்த ர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்டது சங்கம் விடுதி ஊராட்சி.

இந்த ஊராட்சிக்கு உட்  பட்ட குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு குடிநீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தொட்டி யிலிருந்து வரும் தண்ணீரை குடித்த தால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த  குழந்தைகள் உள்ளிட்ட சிலருக்கு கடந்த மூன்று தினங்களாக வயிற்று  வலி, வாந்தி- மயக்கம் ஏற்பட்டு,  அரசு மற்றும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப் பார்த்தபோது, அதில் மாட்டுச்  சாணம் இருந்ததாக அப்பகுதியினர்  கூறுகின்றனர். இதனால் அதிர்ச்சிய டைந்த அம்மக்கள் கந்தர்வ கோட்டை வட்டார வளர்ச்சி அலுவ லருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற வட்  டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட  அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை எடுத்து  ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இது  அப்பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

வேங்கைவயலில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நடந்து ஒன்  றரை ஆண்டைக் கடந்தும், இது வரை குற்றவாளிகள் கண்டுபிடிக் கப்படவில்லை.  எனவே, இதுவும் இன்னொரு வேங்கைவயல் சம்பவமாக மாறி விடாத வகையில், அதிகாரிகள் உட னடியாக விசாரணை மேற் கொண்டு உண்மைக் குற்றவாளி களை கண்டறிய வேண்டும்.  அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலும் அதை இயக்குபவரைத் தவிர, வேறு யாரும் மேலே ஏறிச் செல்ல முடி யாத அளவுக்கு இடையில் தடுப்பு  ஏற்படுத்தி பூட்டுப் போட வேண்டும்.  அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதை தமிழ்நாடு அர சும் மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கவிவர்மன் தெரிவித்  துள்ளார்.

எம்.சின்னதுரை எம்எல்ஏ 
நடந்துள்ள சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கந்தர்வகோட்டை  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, குடிநீரை ஆய்வுக்கு அனுப்பி, அறிக்கையை உடனடி யாகப் பெற்று, குடிநீரில் மாட்டுச் சாணம் கலந்திருக்கும் பட்சத்தில், உடனடியாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளார்.

;