india

img

கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 95.64 சதவீதமாக அதிகரிப்பு...

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மிகவும் அதிகரித்த கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது. நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே82 லட்சத்து 80 ஆயிரத்து 472 ஆக உயர்வடைந்து உள்ளது. இதனால் குணமடைந்தோர் விகிதம் 95.64 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது 9 லட்சத்து 13 ஆயிரத்து 378 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 25 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரத்து 072 ஆக உள்ளது. நாடு முழுவதும்  ஜூன் 14வரை 38 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 984  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்  (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள் ளது.

;