india

img

அனைத்து ஏகபோக நிறுவனங்களிலும் அமித் ஷாவுக்கு பங்கு

புதுதில்லி, ஏப்.23- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவ ரது மனைவியும் டாடா, ரிலை யன்ஸ், அதானி குழுமம், வேதாந்தா, பஜாஜ், பிர்லா போன்ற அனைத்து முன்னணி ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளதாக வேட்பு மனுவுடன் சமர்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான எம்ஆர் எப் உள்ளிட்ட 10 நிறுவனங்களில் அமித் ஷா வும் அவரது மனைவியும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் அமித் ஷா மற்றும் அவரது மனைவியின் சொத்து இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

சொத்து மதிப்பு ரூ.30.49 கோடியில் இருந்து ரூ.65.7 கோடியாக அதிகரித்துள்ளது. 2014இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்த  பிறகு, அமித் ஷா மகன் ஜெய்ஷா சொத்துக்கள் மிகப்பெரிய அளவுக்கு அதி கரித்து பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. ஜெய்ஷாவின் நிறுவனமான குசும் ஃபின்சர்வ் 2014இல் 23,729 ரூபாய் நஷ்டத் தில் இருந்து 2019இல் 1.81 கோடி வருவாய் ஈட்டி வளர்ந் தது. ஐந்து ஆண்டுகளில் வரு மானத்தில்  14,425 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்பட்டது.

குசும் ஃபின்சர்வ் குஜராத்தில் உள்ள இரண்டு கூட்டுறவு வங்கி கள் மற்றும் ஒரு மத்திய பொதுத்துறை நிறு வனம் ஆகியவற்றிடமிருந்து 97.35 கோடி ரூபாய் நிதி உதவியையும் பெற்றுள்ளது. இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், குஜராத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தைத் தொடங்க இந்தத் துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத குசும் ஃபின்சர்வ் நிறுவனத்துக்கு ரூ.10.35 கோடி வழங்கியுள்ளது.  அமித்ஷாவும் அவரது மனைவியும் 242 நிறுவனங்களில் ரூ.37.4 கோடி முதலீடு செய்துள்ளனர்.

;