politics

img

விளையாட்டு செய்திகள்

உத்தரப்பிரதேசத்தை வீழ்த்திய தமிழ்நாடு

புரோ கபடி தொடரில் நட்சத்திர அணிகளில் ஒன்றான தமிழ்நாடு அணி நடப்பு சீசனில் கடுமையாக திணறி வந்த நிலையில், தனது 11-ஆவது லீக் ஆட்டத்தில் உத்தரப்பிரதேச அணியை எதிர்கொண்டது. புதனன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய 
தமிழ்நாடு அணி 46-27 என்ற கணக்கில் உத்தரப்பிரதேச அணியை வீழ்த்தி மீண்டும் பார்மில் நுழைந்துள்ளது. தமிழ்நாட்டின் நட்சத்திர வீரரான நரேந்தர் அதிகபட்சமாக 14 புள்ளிகளை குவித்து வெற்றிக்கு உதவினார். புரோ கபடி தொடரில் மீண்டும் வெற்றிப்படிகளில் காலடி வைத்து இருப்பது தமிழ்நாடு அணி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அடிலெய்டு டென்னிஸ்
தரவரிசையில் இல்லாத வீராங்கனையிடம் தோற்ற ரைபகினா

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முன்னணி சர்வதேச டென்னிஸ் தொடரான அடிலெய்டு டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உல கின் முதல்நிலை வீராங்கனையும், கஜ கஸ்தான் நாட்டவருமான ரைபகினா தர வரிசையில் இல்லாத அலெக்சான்ட்ரோ விடம் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். ரைபகினா 3 நாட்களுக்கு முன் நிறைவு பெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் நட்சத்திர அதிரடி வீராங்கனையும், தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் பெகுலா, தரவரிசையில் இல்லாத ரஷ்யா வின் அனஸ்டாஸியாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-6 (7-1), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  

இதே போல மற்றொரு தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் லாத்வியா வின் ஒஸ்டாபேன்கா, தரவரிசையில் இல்லாத உக்ரைன் வீராங்கனையான மார்ட்டாவை 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். காயம் காரணமாக ஜெர்மனி வீராங்கனை லாரா விலக, ரஷ்ய வீராங்கனை கசட்கினா அரையிறுதிக்கு முன்னேறினார்.

அதிர்ச்சியில் ஆடவர் பிரிவு

ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகில் முதல் இரண்டு இடங்களில் உள்ள வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியுள்ளனர். தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் பவுல் 1-6, 1-4 என்ற செட் கணக்கில் தரவரிசையில் இல்லாத பிரிட்டனின் டிராப்பரிடம் வீழ்ந்தார். இதே போல தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள சிலியின் ஜாரி, தரவரிசையில் 7-ஆம் இடத்தில் உள்ள லெகாசக்காவிடம் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.

;