states

img

அன்பான வாக்காளர் பெருமக்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது

கடந்த 10 ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, வேலையின்மை, தொழில்கள் முடக்கம் என அனைத்து வகையிலும் மக்களின் வாழ்க்கையை சீரழித்ததுடன், மதவாதக் கொள்கைகளால் நாட்டின் அமைதியையும் சீர்குலைத்து வரும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு, தமிழ்நாடு வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

கூட்டாட்சி - சமூகநீதியை சிதைத்த மோடி ஆட்சி

நடைபெறவுள்ள 18-ஆவது மக்களவைத் தேர்தல் இந்திய வரலாற்றில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். கடந்த 10 ஆண்டு காலமாக ஒன்றிய  ஆட்சியில் அமர்ந்துள்ள நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக கூட்டணி அரசு, இந்திய குடியரசின் நான்கு அடிப்படை தூண்களாக அமைந்துள்ள மதச் சார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, கூட்டாட்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றை திட்டமிட்ட முறையில் தகர்த்து வருகிறது.

நாட்டைத் துண்டாடுவதற்கு பாஜக துடிக்கிறது

கடந்த பத்தாண்டு காலமும் இந்தியத் திருநாடு ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சியாளர்கள் மற்றும் அவர் களது பல்வேறு அமைப்புகள் மூலமாக ஏவப்படுகிற, நடத்தப்படுகிற மதவெறித் தாண்டவங்களால் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த முறை கிடைக்கப் பெற்ற அதீத பெரும்பான்மையை பயன்படுத்தி, மதச்சார்பின்மை எனும் கோட்பாட்டின் மீது  கொடூரத் தாக்குதல் நடத்தியது பாஜக அரசு. சிறு பான்மை இஸ்லாமிய மக்களை குறிவைக்கும் விதத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை பலவந்தமாக அம லாக்கிய மோடி அரசு, இன்னும் கூடுதல் இடங்கள் கிடைக்கப் பெற்றால் பொது சிவில் சட்டம் உள்பட தங்களது இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சி நிரல் அனைத்தையும் அமல்படுத்துவோம் என்றும், இது வரை செய்திருப்பது அனைத்தும் வெறும் டிரெய்லர் தான் என்றும் கொக்கரிக்கிறது. அதையே தனது தேர்தல் அறிக்கையாகவும் முன்மொழிந்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் பொது சிவில் சட்டம் போன்றவை  எதிர்காலத்தில் இந்திய நாட்டையே பிளவுபடுத்தக்கூடிய, நாடு முழுவதும் இரத்தக்களறி ஏற்படுத்தக்கூடிய அதி பயங்கர சட்டங்கள் ஆகும்.

நாட்டின் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சி

மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் என்பது உயிர் உருவப்பட்ட வெற்றுக் கூடாக மாற்றப்பட்டிருக்கிறது. மாற்றுக்கருத்து முன்வைக்கும் எவறாக இருந்தாலும்- சாதாரண குடிமக்களாக இருந்தாலும், மாநிலத்திற்கே முதலமைச்சராக இருந்தாலும் - அவர்களை அராஜக மாக ஆள்தூக்கிச் சட்டங்களை பயன்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறது மோடி அரசு. இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் உயிரும், கடந்த பத்தாண்டுக் காலத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வறுமையி லிருந்து 25 கோடி மக்களை வெளியில் கொண்டு வந்துவிட்டோம் என்று தம்பட்டம் அடிக்கிறது மோடி அரசு. ஆனால் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து அம்சங் களிலும் படுதோல்வி அடைந்திருக்கிறது. உலக அள விலான வறுமைக் குறியீட்டில் 125 நாடுகளில் இந்தியா  111-ஆவது இடத்தில் இருக்கிறது என்பதே மோடி ஆட்சியின் கீழ் பொருளாதார வீழ்ச்சி எந்த அளவிற்கு சென்றுள்ளது என்பதை விளக்கும்.

ஏழைகளின் வாழ்க்கையை சூறையாடிய ஆட்சி

அதுமட்டுமல்ல, கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரி பொருட்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி அமலாக்கம், பண மதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கைகளால் மக்களின் வாழ்நிலை மிகக் கடுமையாக சூறையாடப்பட்டுள்ளது. மற்றொரு புறம், கடந்த 2023-ம் ஆண்டின் கணக்கின்படி இந்திய மக்களில் உயர் அடுக்கில் உள்ள  வெறும் 10 சதவிகிதம் பேரின் செல்வக்குவிப்பு 22 சத விகிதம் அதிகரித்திருக்கிறது; அதேவேளை கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவிகிதம் மக்களின் செல்வம் 13 சதவிகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுமார் ரூ. 16 லட்சம் கோடி அளவிலான கடன்கள் வராக்கடன்களாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால் சாதாரண ஏழை, எளிய விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப் படவில்லை. மோடியின் ஆட்சியில் பணக்காரர்கள் மெகா பணக்காரர்களாக; ஏழைகள் வறியவர்களிலும் வறியவர்களாக மாறியிருக்கிறார்கள்.

வரலாறு காணாத ஊழல் ராஜாங்கம்

ஊழலை ஒழிப்பதற்காகவே பிறப்பெடுத்திருப்பது போன்று நீட்டி முழக்கும் பாரதிய ஜனதா கட்சியும், பிரதமர் நரேந்திர மோடியும் உலக மகா ஊழலாக வெளிச்சத்திற்கு வந்துள்ள தேர்தல் பத்திர ஊழல் மூலமும், பிஎம் கேர்ஸ் ஊழல் மூலமும் பல்லாயிரம் கோடி ரூபாயை வாரிச் சுருட்டியிருக்கிறார்கள். பத்தாண்டு காலம் மோடியின் ஆட்சியில் இந்திய  ஒன்றியத்தின் அடிநாதமாக விளங்குகிற கூட்டாட்சி கோட்பாடு மிக கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி யுள்ளது. மாநிலங்களின் உரிமைகளும், நிதி ஆதாரங் களும் உறிஞ்சப்பட்டு ஒன்றிய அரசால் விழுங்கப்படு கின்றன. ஆளுநர்களை ஏவி மாநில அரசுகளின்  அதிகாரங்களை பறிக்கும் இழி முயற்சிகளுக்கும் அளவில்லை. மாநிலங்களுக்கு எதிராக நிதி பயங்கர வாதம் போன்ற தாக்குதல் ஏவிவிடப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு கேட்ட நிவாரணத்தில் ஒரு பைசா கூட தராததும்; கேரளம், கர்நாடகம் உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எவ்வித திட்டங்களுக்கும் நிதி தராத தும் இந்த நிதி பயங்கரவாதங்களுக்கு உதாரணம்.

கடுமையாக வஞ்சிக்கப்பட்ட தலித்துக்கள், பழங்குடிகள்

பத்தாண்டு காலம் மோடியின் ஆட்சியில் தலித்  மக்கள், பழங்குடி மக்கள், பெண்கள், சிறுபான்மை மக்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பின ரும் தாங்க முடியாத தாக்குதல்களுக்கும் துயரங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். சாதி, மத வேறுபாடுகளையும், சாதிய கொடூரங்களையும் தூக்கிப் பிடிக்கும் மனுவாத - வர்ணாசிரம அதர்மங்களை சமூக வாழ்வியலின் அடிப்படையாக மாற்றுவதற்கு ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சியாளர்கள் தீவிரமான முயற்சிகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இத்தகைய பின்னணியில் நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஏப்ரல் 19 அன்று துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக மிக முக்கியமான தேர்தலாகும்.

நம்பிக்கையளிக்கும் ‘இந்தியா’ கூட்டணி

இந்திய அளவில் பாஜக அரசுக்கு எதிராக மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள எதிர்க்கட்சிகளின் மாபெரும் அணிவகுப்பாம் ‘இந்தியா’ கூட்டணி, தமிழ்நாட்டில் திமுக தலைமையில் தேர்தல் களத்தில் கோடானுகோடி மக்களைச் சந்தித்து, தேசம் காக்கும் இந்த மகத்தான போரில், பாஜக அரசை வீழ்த்தி இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு பிரச்சாரக் களத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில், கடந்த மூன்று மாதம் காலம் வரையிலும், பாஜகவுடன் கூடிக் குலாவிவிட்டு, தற்போது  பிரிந்துவிட்டதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இந்தப் பிரச்சாரக் களத்தில்  ஒரு வார்த்தைக்கூட மோடி அரசின் கேடுகெட்டக் கொள்கைகளை விமர்சிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கது. இதுகாறும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களிடம் சரண்டைந்து கிடந்த அதிமுக மாநில உரிமைகளையும், மக்கள் நலன்களையும் காவு கொடுத்தது;

தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்த அதிமுக - பாமக

விவசாய விரோத வேளாண் சட்டங்களை நாடாளு மன்றத்தில் ஆதரித்தது,  இஸ்லாமிய மக்கள் மற்றும் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச்சட்டத்தை அதிமுக நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்ததன் விளைவாகத்தான் அந்த மசோதா நிறைவேறியது. அதேபோல தொழிலாளர் உரிமைகள் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை சீர்குலைக்கும் சட்டத் தொகுப்புகள், தேர்தல் பத்திரத் திட்டம் போன்ற அனைத்தையுமே ஆதரித்ததன் மூலம் நாட்டு மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் அப்பட்டமாக அதிமுக துரோகமிழைத்தது. அதேபோல சமூகநீதி பேசி வரும் பாட்டாளி மக்கள்  கட்சி, சமூக நீதியை;f குழி தோண்டி புதைத்த பாஜக வுடன் கூட்டுச் சேர்ந்து தமிழக மக்களுக்கு வஞ்சகம் இழைத்துள்ளது.

40 தொகுதிகளிலும் வெற்றியைத் தாரீர்!

இத்தகைய பின்னணியில் தமிழ்நாட்டில், மாநில  உரிமைகளுக்காக பல்லாண்டு காலமாக ஒன்றி ணைந்து குரல் கொடுத்து வருகிற; மக்கள் நலன் காக்க பல்வேறு சிறந்த திட்டங்களை அமலாக்கி வருகிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான - திமுக தலைமையில் கம்பீரமாக களப்பணி ஆற்றிக் கொண்டிருக்கிற - ‘இந்தியா’ கூட்டணியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிடும் 40 தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களுக்கு நாளைய தினம் (ஏப்ரல் 19) நடைபெறவுள்ள வாக்குப்பதிவின் போது உதயசூரியன், கை, சுத்தியல் அரிவாள் நட்சத்திரம், கதிர் அரிவாள், பானை, தீப்பெட்டி, ஏணி ஆகிய சின்னங்களில் வாக்களித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியினை தருமாறு தமிழ்நாடு வாக்காளர் பெருமக்களுக்கு இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறோம்.






 


 

 

;