states

img

தேர்தல் மோசடி : திரிபுரா பாஜகவின் ஸ்டைல்!

பாஜகவின் ஆதரவு வாக்குகள் ஒரு லட்சம் நீக்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை புகார் வாசித்தார். இதே பாணியில் பல பாஜக வேட்பாளர்களும் பொய்களை பரப்ப முயன்றனர். வாக்குகள் சேர்ப்பதும் நீக்குவதும் தேர்தல் ஆணையத்தின் பணி என்பதும் அது மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாடில் இல்லை என்பதையும் கூட மாநில மக்கள் அறியமாட்டார்கள் என இவர்கள் மனப்பால் குடித்தார்கள் போலும்! அதே சமயத்தில் திரிபுராவில் அண்ணாமலை கட்சியினர் அரங்கேற்றியுள்ள தேர்தல் மோசடிகள் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவது போல உள்ளது. தேர்தல்கள் நியாயமாக நடந்தால் தாங்கள் வெல்ல வாய்ப்புகள் குறைவு என்பதை அறிந்த பாஜகவினர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டனர். கள்ள ஓட்டு/ தேர்தல் அதிகாரிகளை வளைத்து அல்லது பயமுறுத்தி மக்களை வாக்களிக்க வைப்பது/ தமது எதிர்தரப்பு வாக்குகளை பதிவு செய்யவிடாமல் தடுப்பது என பல மோசடிகளை அரங்கேற்றினர். இப்படி திருட்டுத்தனம் செய்பவர்கள் தங்களின் திருட்டுத்தனத்துக்கான நிரூபணங்களையும் அவர்கள் அறியாமலேயே பதிவு செய்துவிடுகின்றனர். அத்தகைய நிரூபணங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில  செயலாளர் தோழர் ஜிதேந்திர சவுத்ரி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். 

மேற்கு திரிபுரா நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற சில தில்லு முல்லுகள்:
 

இத்தகைய மோசடிகள்தான் பாஜக ஆளும் திரிபுராவில் அரங்கேற்றப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் கும்பகர்ண தூக்கத்தில் இருப்பதால் பாஜகவின் மோசடிகள் அதிகரித்துக்கொண்டுள்ளன. தேர்தல் நடைமுறைகள் கேலிக்குரியதாக மாறி வருகின்றன.

- அ.அன்வர் உசேன்

 

;