tamilnadu

img

நளினியை ஜுலை 5ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

நளினியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜூவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினியை வரும் 5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். 
இதைத்தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. 

விசாரணையைத் தொடர்ந்து நளினியை ஜூலை 5ம் தேதி  மதியம் 12.5 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

;