tamilnadu

img

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கியது  உச்சநீதிமன்றம்

புதுதில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை யினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கடந்தஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில்திகார் சிறையில் அடைக்கப் பட்டார். தற்போது அமலாக்கத்துறையினர் ப.சிதம் பரத்தை கைது செய்து, அக்டோபர் 24ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.சிதம்பரத்திற்கு ஜாமீன்வழங்க தில்லி உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30 அன்று மறுத்துவிட்டது. இதையடுத்து, ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதைவிசாரித்த நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு, சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி செவ்வா யன்று உத்தரவிட்டுள்ளது.ப.சிதம்பரம் சிபிஐவிசாரணைக்கு முழுஒத்து ழைப்பு அளிக்க வேண்டும் என்றும், முன்அனுமதி பெறாமல் வெளிநாடு செல்லக்கூடாது என்றும் உச்சநீதி மன்றம் நிபந்தனை விதித் துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, விசாரணைக் காவலில் உள்ளதால் தற்போது சிறையில் இருந்து அவர் வெளிவரமுடியாது.

;