tamilnadu

img

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை ஒப்படைப்பதில் காலதாமதம் வேண்டாம்

மதுரை, ஜூன் 7- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கான நிலத்தை ஒப்படைப்பதில் நிலவும் காலத் தாமதத்தை களைந்து, உடனடி யாக ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென தமிழக முதல்வ ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வேண்டு கோள் விடுத்துள்ளார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இதுவரை தமிழக அரசு நிலம் ஒப்படைக்கவில்லை என்று தகவலறியும் உரிமைச்சட்ட மனு மூலம் தெரிய வந்துள்ளது.  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்க ளவை உறுப்பினராக பொ.மோகன் முன் முயற்சி எடுத்த நிலையில், பல்லாண்டு காலம் கழித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்து, கடந்தாண்டு மதுரை தோப்பூ ரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமா னப் பணிக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். எனினும் கட்டுமா னப்பணி எதுவும் இன்னும் துவங்க வில்லை.

இந்நிலையில், மதுரை திருநகரைச் சேர்ந்த வி.எஸ்.மணி என்பவர் தகவல றியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம், மதுரையில் அமையப்போகும் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து விளக்கம் கேட்டிருந்தார்.  கடந்த மார்ச் மாதம் அனுப்பப்பட்ட விண்ணப்பத்திற்கு ஏப்ரல் முதல் வாரத்தில் பதிலளித்துள்ள சுகாதார அமைச்சகம், எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு ரூ.1264 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், முதற் கட்டமாக மண் ஆய்வு, சுற்றுச் சுவர் அமைப்பது உள்ளிட்ட துவக்க நிலை பணிகளுக்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. எனினும் மருத்துவமனை கட்டுவதற்கான வரைபடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், மருத்துவமனைக்கான நிலம் இது வரை தமிழக அரசால் ஒப்படைக்கப் பட வில்லையென்றும் சுகாதார அமைச்ச கம் மேலும் தெரிவித்துள்ளது.

 சு.வெங்கடேசன் கடிதம்

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை ஒப்ப டைப்பதில் காலதாமதம் கூடாது என தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங் கடேசன் வெள்ளியன்று கடிதம் எழுதி யுள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டி ருப்பதாவது: மதுரையில் பெருகி வரும் சுகாதார தேவைகளுக்கேற்ப, தென் தமிழ கத்தில் உள்ள பல லட்சக்கணக்கான மக்களின் மருத்துவ வசதியையும் உயர்தர சிகிச்சைக்கான வாய்ப்புகளை யும் உருவாக்கும் பொருட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட வேண்டு மென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  (மார்க்சிஸ்ட்) நாடாளுமன்ற உறுப்பி னராக செயலாற்றிய தோழர் பொ.மோகன் அவர்கள் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்டதன் பலனாக வும், மாநில அரசின் தொடர் முயற்சியா லும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை யில் அமைவதற்கான வாய்ப்பு ஏற் பட்டது. இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசு இதற்கான ஒப்புதலை அளித்து, மருத்துவமனை அமைய வுள்ள இடத்தில் மண் பரிசோதனை, சுற்றுச்சுவர் அமைப்பது போன்ற நட வடிக்கைகளுக்காக முன்னேற்பாட்டு நிதியாக ரூ.5 கோடியை விடுவித்துள்ளது.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமையவுள்ள நிலத்தை மாநில அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வடிவமைப்பு மற்றும் திட்ட வரைபடம் உள்ளிட்டவை தயாரிக்கப்படவில்லை;  இறுதி செய்யப்படவில்லை என்றும் ஊடகங்களில் வரும் செய்திகள்  தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, ஒப்பு தலே மிகுந்த காலதாமதமானதால் நீதி மன்றம் கூட தலையிட வேண்டியிருந்தது என்பதை அறிவீர்கள்.  அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு இன்னும் நிலமே ஒப்படைக்கப்பட வில்லை என்கிற செய்தி  கவலை அளிக்கிறது. எனவே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை மாநில அரசு உடனே ஒப்ப டைக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், தொடர்புடைய பணிகளை முடுக்கிவிட வும் தங்களது மேலான தலையீடு அவசி யமாகிறது. இதுதொடர்பாக சம்பந் பப்பட்ட துறையினருக்கு உரிய ஆணை வழங்கிட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

 

;