tamilnadu

img

தமிழகத்தில் ஆசிரியர் தகுதிதேர்வில் 1 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி!

சுமார் 5  லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் எழுதிய ஆசிரியர் தகுதித்தேர்வின் இரண்டு தாள்களிலும் சேர்த்து வெறும் 1263 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில்,அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டப்படி ஆரம்பம் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு முடிக்க வேண்டும் என்பது அரசின் கட்டாய விதியாகும். 1 முதல் 5-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற முதல் தாளிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்க இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

இதனடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வுகளை (TET), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. முதல் மற்றும் 2-ம் தாள் ஜூன் 8 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.இதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இரண்டு தாள்களையும் சுமார் 5 லட்ச்சத்திற்க்கும் மேற்பட்டோர் எழுதினர். 

இந்நிலையில் இரண்டு தாள்களிலும் சேர்த்து மொத்தம் 1263 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். முதல் தாளில் 915 பேரும், இரண்டாம் தாளில் 348 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


 

;