tamilnadu

img

சுபஸ்ரீ பலி: அதிமுக பிரமுகர் கைது செய்யப்படாததற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை, செப்.25- சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண்  பலியானது தொடர்பான வழக்கு, நீதிபதி கள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்  தது. அப்போது இந்த வழக்கில் தொடர்பு டைய அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என திமுக தரப்பில் தெரிவிக்கப் பட்டது. விசாரணையை சி.பி.சி.ஐ.டி. விசா ரணைக்கு மாற்றவும் கோரப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பிலும், காவல் துறை சார்பிலும் தனித்தனியாக அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. மாநகராட்சி அறிக்கையில்,  உதவிப் பொறியாளர், செயற்பொறியாளர் ஆகி யோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்  கப்பட்டுள்ளதாகவும், இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு மாநகராட்சி சார்பில் ரூ. 5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை அறிக்கையில், பள்ளிக்  கரணை காவல் ஆய்வாளர் மீது துறை  ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும், பிரதான எதிரியான ஜெய கோபாலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடி வருவதாகவும் கூறப்பட்டது. 

அப்போது பேனர் வைக்கக் கூடாது என கட்சியினரை அறிவுறுத்துவது தொடர்பாக ஆளுங்கட்சி சார்பில் பிர மாண பத்திரம் தாக்கல் செய்யப் பட்டுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி  எழுப்பினர். மேலும் காவல் துறையினர்  மீது என்ன நடவடிக்கை எடுக்க உத்தே சிக்கப்பட்டுள்ளது என்றும், ஜெய கோபாலை எப்போது பிடிப்பீர்கள் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தங்கள் நேரில் சென்று பேனர்களை எடுக்கவில்லை என்பதைத் தவிர மற்றபடி அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்து விட்டதாகத் தெரிவித்தனர். ஜெயகோபாலை கைது செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் மற்றும் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் அறிக்கை அளிக்க உத்தர விட்ட நீதிபதிகள், மொத்த வழக்கையும் காவல் ஆணையர், கண்காணித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  முன்னதாக, டிஜிட்டல் பேனர் பிரிண்டர்கள் சங்கம் சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர், பண்டிகைக் காலம்  என்பதால் கடைகள் சார்பில் விளம்ப ரங்கள் வைக்கப்படும் என்றும், அவற்றை அச்சிட அனுமதி வழங்க வும் கோரிக்கை விடுத்தார். ஆனால்  அதனை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். 

;