tamilnadu

img

வங்கதேச அணிக்கெதிரான டி-20 போட்டி நடக்குமா?

தில்லியில் கடும் காற்று மாசு 

நாட்டின் தலைநகரான தில்லியில் வாகன போக்கு வரத்தால் கடும் காற்று மாசு நிலவுவது வழக்கமான விஷயம் தான். இதனை கட்டுப்படுத்த தில்லி அரசு ஒற்றை எண், இரட்டை என வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த பல்வேறு திட்டம் அமல்படுத்தியும் மாசற்ற இயல்பு நிலை திரும்பவில்லை.  இந்த காற்று மாசு பிரச்சனை குளிர் காலங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்து வது வழக்கம். இந்த காற்று மாசு சீசனில் உள்ளரங்க போட்டிகள் மட்டுமே சிக்க லின்றி நடைபெறுகிறது. கிரிக்கெட், கால்பந்து போன்ற பெரிய வெளியரங்க விளையாட்டுப் போட்டிகளுக்கு கடும் குடைச்சல் ஏற்படும்.  

வங்கதேச அணி 3 டி-20, 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இந்திய வந்துள்ளது. இந்த தொடர் வரும் 3-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் டி-20 போட்டி தலைநகர் தில்லியில் நடைபெறுகிறது.  ஏற்கெனவே தில்லி நகர் மாசு பிரச்சனையால் திணறிவரும் நிலையில் தீபாவளி பண்டிகையில் வெடிக்கப்பட்ட பட்டாசு மாசால் காற்றின் தரம் அதிகம் குறைந்துள்ளது.  இதனால் தில்லி டி-20 நடைபெறுவதில் சிக்கல் உருவாக அதிக வாய்ப்புள்ளது. போட்டி நடைபெற இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், காற்றின் தரத்தில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

போட்டியை மாற்றும் 
திட்டம் இல்லை 
பிசிசிஐ 

தில்லி காற்று பிரச்சனை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது, “தீபாவளி சமயத்தில் தில்லியில் காற்று மாசு அதிகரித்திருந்தாலும் அடுத்த சில நாள்களில் கற்று மாசு  குறைந்து இயல்புநிலை மாறும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். அதுவரை தில்லி டி-20-யை மாற்றும் திட்டம் எதுவும் கிடையாது எனக் கூறியுள்ளார்.
 

;