tamilnadu

கோவையில் வாரசந்தைகள் செயல்பட தற்காலிமாக தடை - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோவை, ஜூன் 11- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் வாரச் சந்தைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளரும் தனி அலுவலரு மான ஷரவன்குமார் ஜடாவத் தெரி வித்துள்ளதாவது, கோவை மாநக ராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வாரச்சந்தைகளில் பொதுமக் கள் போதிய தனிமனித இடைவெ ளியினை கடைபிடிக்காமல் கூட்ட நெரிசல்கள் மிகுந்து காணப்படு வதாக தொடர்ந்து புகார்கள் வரப் பெற்று வருகிறது. இதனடிப்ப டையில் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டுவரும் வாரச்சந்தைகள் கொரோனா ஊரடங்கின் விதிமுறை களை பின்பற்றாத காரணத்தினாலும், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாலும், பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சிக்குட்பட்ட பகு திகளில் செயல்பட்டுவரும் வாரச் சந்தைகள் இயங்குவதற்கு தடை விதிக் கப்பட்டுள்ளது.     மேலும், பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவ சம் அணிந்து செல்ல வேண்டும். முகக் கவசம் அணியாமல் வரும் நபர்க ளுக்கு ரூ.100/- அபராதமாக விதிக்கப் பட்டு வருகிறது. பொது இடங்களில் கூடும் மக்கள் போதிய தனிமனித இடைவெளியினை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும், என தெரிவித்துள் ளார்.

;