tamilnadu

img

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மாணவர்கள் 92.37% பேரும், மாணவிகள் 96.44%பேரும் என மொத்த தேர்ச்சி விகிதம் 94.56% ஆக உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7,60,606 மாணவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில், 4,08,440 பேர் மாணவிகள், 3,52,165 பேர் மாணவர்கள், மாற்று பாலினத்தவர் ஒருவர். இந்த நிலையில், தேர்வில் 7,19,196 (94.56%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 92.37% பேரும், மாணவிகள் 96.44%பேரும், மாற்று பாலினத்தவர் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். 
அரசுப் பள்ளி மாணவர்கள் 91.02% பேரும், அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்கள் 95.49% பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 96.7% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்
இயற்பியல் - 98.48%
வேதியியல் - 99.14%
உயிரியல் - 99.35%
கணிதம் - 98.57%
தாவரவியல் - 98.86%
விலங்கியல் - 99.04%
கணினி அறிவியல் - 99.80%
வணிகவியல் - 97.77%
கணக்குப் பதிவியல் - 96.61%

12-ஆம் வகுப்பு: மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்
திருப்பூர் - 97.45%
ஈரோடு - 97.42%
சிவகங்கை - 97.42%
அரியலூர் - 97.25%
கோவை - 96.97%
விருதுநகர் - 96.64%
பெரம்பலூர் - 96.44%
திருநெல்வேலி - 96.44%
தூத்துக்குடி - 96.39%
நாமக்கல் - 96.10%
தென்காசி - 96.07%
கரூர் - 95.90%
திருச்சி - 95.74%
கன்னியாகுமரி - 95.72%
திண்டுக்கல் - 95.40%
மதுரை - 95.19%
ராமநாதபுரம் - 94.89%
செங்கல்பட்டு - 94.71%
தேனி - 94.65%
சேலம் - 94.60%
சென்னை - 94.48%
ஊட்டி - 94.27%
கடலூர் - 94.36%
புதுக்கோட்டை - 93.79%
தருமபுரி - 93.55%
தஞ்சாவூர் - 93.46%
புதுச்சேரி - 93.38%
விழுப்புரம் - 93.17%
திருவாரூர் - 93.08%
கள்ளக்குறிச்சி - 92.91%
வேலூர் - 92.53%
மயிலாடுதுறை - 92.38%
திருப்பத்தூர் - 92.34%
காஞ்சிபுரம் - 92.28%
ராணிப்பேட்டை - 92.28%
கிருஷ்ணகிரி - 91.87%
திருவள்ளூர் - 91.32%
நாகை - 91.19%
திருவண்ணாமலை - 90.47%
காரைக்கால் - 87.03%

பாடங்களில்100% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை
தமிழ் - 35
ஆங்கிலம் - 7
இயற்பியல் - 633
வேதியியல் - 471
உயிரியல் - 652
கணிதம் - 2587
தாவரவியல் - 90
விலங்கியல் - 382
கணினி அறிவியல் - 6996
வணிகவியல் - 6142
கணக்கு பதிவியல் - 1647
பொருளியல் - 3299
கணினிப் பயன்பாடுகள் - 2251
வணிகக்கணிதம் மற்றும் புள்ளியியல் - 210
ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 26,352
 

;