tamilnadu

img

அரபிக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம்  

அரபிக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடலில், தெற்கு கர்நாடகா – வடக்கு கேரளா கடலோர பகுதிக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுப்பெறக்கூடும்.  மேலும் வங்கக்கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் எனவும், 18 ஆம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழக கடலோர பகுதியை நெருங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அரபிக்கடல், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதன் காரணமாக நாளையும், நாளை மறுநாளும் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. 

;