tamilnadu

பைக்கில் 2 பேருக்கு மேல்பயணம்: காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்

சென்னை, மே 14-இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.கடந்த 2010ஆம் ஆண்டு இருசக்கரவாகனத்தில் சென்ற போது கார் மோதிய விபத்து ஒன்றில் காயமடைந்த கணேசன், ரகு ஆகியோர் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கு, நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள் உள்ளிட்ட நான்கு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, ஓட்டுபவருக்கு கைப்பிடியை இயக்க சிரமம் ஏற்படும் என்பதாலும், நிலைதடுமாறும் சூழல் ஏற்படும் என்பதா லும் இந்த விபத்தில் அவர்களுக்கும் சமமான பங்கு உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார். அதனை கருத்தில் கொண்டே தீர்ப்பாயம் இழப்பீடு நிர்ணயித்துள் ளதாக கூறி, மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும், இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் பயணம் செய்வது விதிகளுக்கு முரணானது என்றாலும், இருவருக்கு மேல் பயணம் செய்வதை காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை எனவும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

;