tamilnadu

img

கொரோனா பாதித்த எம்எல்ஏவிடம் நலம் விசாரித்த முதல்வர்

சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பழனியிடம் முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு வருமாறு:-

கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி பழனி, கடந்த 12ஆம் தேதி சென்னை நந்தம் பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். இந்த செய்தி அறிந்தவுடன் எம்எல்ஏ-வின் உடல்நிலை குறித்து அவரது மகன்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரித்து அறிந்தார்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பழனிக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக செய்யுமாறு அறிவுறுத்தினார்.கடந்த ஜூன் 13 ஆம் தேதி எம்எல்ஏ பழனியின் மகன் செல்வத்திடம் பழனியின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார்.

இதையடுத்து, ஞாயிறன்று ஜூன் 14 காலை மற்றொரு மகனான வினோத்திடம் தந்தையின் உடல் நலம் குறித்து விசாரித் தார். பின்னர், 10 மணியளவில் எம்எல்ஏ பழனியிடம் தொலைபேசியில் முதலமைச்சர் பேசினார். உடல் நிலையை நன்றாக பார்த்துக் கொள் ளுமாறுக் கூறி தேற்றியுள்ளார்.பின்னர் மருத்துவ உதவிகளை உடனடியாக செய்யுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தினார்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு‌.க.ஸ்டாலின்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. அவர்,  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எல்.எல்.ஏ. பழனி முழுமையாக நலமடைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியிருப்பதாவது:எல்.எல்.ஏ. பழனி நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

;