tamilnadu

img

சுபஸ்ரீ பெற்றோருக்கு சிபிஎம் ஆறுதல்

அனுமதி இல்லாமல் சட்டவரம்புகளை மீறி விளம்பரபேனர்கள், வாழ்த்து பதாகைகள் வைக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. உயர்நீதிமன்றமும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதையெல்லாம் மீறி விளம்பர தட்டிகள் வைக்கின்றனர். அவ்வாறு வைக்கப்பட்ட பதாகையால் இளம்பொறியாளர் சுபஸ்ரீ இறந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் விளம்பர பேனர்கள் சரிந்து விழுந்து இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ள துயரம் நிகழ்ந்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல், அரசு அதிகாரிகள் முறைப்படி நடவடிக்கை எடுக்காமல் விட்டதால்தான் சுபஸ்ரீ மரணம் நிகழ்ந்துள்ளது. சுபஸ்ரீ இறந்து ஒருவாரத்திற்குப் பிறகும் ஆளும் கட்சி பிரமுகரை காவல்துறை கைது செய்யவில்லை; தேடிக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். இவ்வளவு பெரிய சம்பவம் நிகழ்ந்த பிறகும் காவல்துறை அக்கறையோடு செயல்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை பிறந்தநாளுக்கு வாழ்த்து, விளம்பரத் தட்டிகளை வைப்பதில்லை. அதை அனுமதிப்பதும் இல்லை.

சுபஸ்ரீ பெற்றோரைச் சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதிலிருந்து...

சென்னையில் அதிமுக பேனர் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு செப்டம்பர் 18 புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரில் சென்று அவரது பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் அ. பாக்கியம், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

;