tamilnadu

img

கொரோனா தடுப்புப் பணியாளர் மரணம்

சென்னை:
கொளத்தூர் பகுதியில் கொரோனா நிவாரணப் பணியில் ஈடுபட்டு வந்த மாநகராட்சி தற்காலிக பணியாளர் சசிகலா உயிரிழந்தார்.

சிவசக்தி நகர், மகாத்மா நகரில் இணைந்து பணியாற்றிய அமைப்புசாரா சங்க நிர்வாகி சசிகலா செவ்வாயன்று (மே 26) மூச்சுத்திணறல் காரணமாக வீட்டிலேயே மரணமடைந்தார்.கொளத்தூரில் பகுதியில் அமைப்புசாரா சங் கத்தை உருவாக்கியதில் சசிகலா அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. இவர் கொரோனா காலத்தில் சென்னை மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை செய்யும் தற்காலிக பணியாளராக கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வந்தார். சிவசக்தி நகரில் வீடு வீடாக சென்று கொரோனா காய்ச்சல் பரிசோதனை செய்யும் வேலை செய்துவந்தார்.இந்நிலையில் சசிகலாவின் மூத்த மகனுக்கு காய்ச் சல் ஏற்பட்டதால் அவரை அழைத்துக் கொண்டு திருவிக நகர் ஆரம்ப சுகாதார மைத்தில் கொரோனா பரிசோதனைக்கு சென்றுள் ்ளார். காய்ச்சல் இருந்ததால் மகனுக்கு மட்டும் பரிசோதனை செய்துவிட்டு  ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தான் பரிசோதனை செய்யப்படும் என்று சுகாதார மையம் கூறியதன் காரணமாக சசிகலா பரிசோதனை செய்துக் கொள்ள முடியாமல் வீடு திரும்பினார்.மகனுக்கு கொரோனா இருப்பது உறுதியான பின் கடந்த 23ம் தேதி அவர் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

சசிகலா வீடு தனிமைப்படுத்தப்பட்டது. நமக்கும் கொரோனா இருக்கும் என்ற அச்சத்தில் செவ்வாயன்று மீண்டும் திருவிக ஆரம்ப சுகாதார மையத் திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.இந்நிலையில் அன்று காலை 10 மணிக்கு அவர்  உயிரிழந்தார். தகவல் அறிந்து மருத்துவர்கள் அவரது உடலை பெரியார் நகர் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் கேஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறு பரிசோதனை செய்தனர். அப்போது  அவருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் நீரிழிவு நோயால் அவர்  உயிரிழந்ததாக மருத் துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் சென்னையில் நோய்த்தொற்று அதிகமாக உள்ள திரு.வி.க.நகர் அருகில் உள்ள பகுதிதான் கொளத்தூர். இந்த பகுதியிலும் கொரோனா  தொற்று அதிகமாக உள்ளது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க அரசு நிர்வாகம் உடனே உரிய தடுப்பு  நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கொளத் தூர் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண் டுள்ளது.
 

;