tamilnadu

img

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு

சென்னை:
திருமூர்த்தி அணையிலிருந்து வரும் 28 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:

“திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்து விடக் கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு வரும் 28 ஆம் தேதி முதல் மொத்தம் 8,700 மி.கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இதனால் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம், தாராபுரம் வட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;